பிறந்தநாள் டிரீட் கொடுப்பாரா பேட் கம்மின்ஸ்? டாஸ் வென்ற லக்னோ பேட்டிங்!

First Published May 8, 2024, 8:01 PM IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 57ஆவது லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

Sunrisers Hyderabad vs Lucknow Super Giants

ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 57ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இரு அணிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

Sunrisers Hyderabad vs Lucknow Super Giants

லக்னோ அணியில் மோசின் கான் நீக்கப்பட்டுள்ளார். குயீண்டன் டி காக் இடம் பெற்றுள்ளார். மேலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் மாயங்க் அகர்வால் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சன்வீர் சிங் இடம் பெற்றுள்ளார். மேலும், ஹைதராபாத் அணியில் விஜயகாந்த் வியாஷ்காந்த் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.

Sunrisers Hyderabad vs Lucknow Super Giants

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:

குயீண்டன் டி காக், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர், கேப்டன்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயூஷ் பதோனி, தீபக் கூடா, குர்ணல் பாண்டிய, கிருஷ்ணப்பா கௌதம், யாஷ் தாக்கூர், ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

டிராவிஸ் ஹெட், நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமாத், ஷாபாஸ் அகமது, சன்வீர் சிங், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெயதேவ் உனத்கட், விஜயகாந்த் வியாஷ்காந்த், டி நடராஜன்.

Sunrisers Hyderabad vs Lucknow Super Giants

இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 3 போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் 55ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 33 போட்டியில் வெற்றியும், 21 போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது.

Sunrisers Hyderabad vs Lucknow Super Giants

இரு அணிகளும் இந்த மைதானத்தில் விளையாடிய ஒரு போட்டியிலும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியே வெற்றி பெற்றிருக்கிறது. இந்த சீசனில் இரு அணிகளும் முதல் முறையாக மோதுகின்றன. இதுவரையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விளையாடிய 11 போட்டிகளில் 6ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.

Sunrisers Hyderabad vs Lucknow Super Giants

இதே போன்று, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி விளையாடிய 11 போட்டிகளில் 6ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Sunrisers Hyderabad vs Lucknow Super Giants

இந்தப் போட்டியில் சாதிக்க காத்திருக்கும் வீரர்கள்:

ஹென்ரிச் கிளாசென் ஒரு பவுண்டரி அடித்தால் ஐபிஎல் கிரிக்கெட்டில் 50 பவுண்டரி அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார்.

கேஎல் ராகுல் 5 பவுண்டரி அடித்தால் ஐபிஎல் கிரிக்கெட்டில் 400 பவுண்டரி அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார்.

நிக்கோலஸ் பூரன் 5 பவுண்டரி அடித்தால் 100 பவுண்டரி அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார்.

Sunrisers Hyderabad vs Lucknow Super Giants

தீபக் கூடா 5 பவுண்டரி அடித்தால் 100 பவுண்டரி அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார்.

மார்கஸ் ஸ்டோய்னிஸ் 9 சிக்ஸர்கள் அடித்தால் 100 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார்.

அபிஷேக் சர்மா தனது 100ஆவது டி20 போட்டியில் விளையாடுகிறார்.

click me!