Parenting Tips : கொளுத்தும் கோடை வெயில்.. குழந்தைகளின் தலைமுடியை பராமரிக்க பெஸ்ட் டிப்ஸ் இதோ!!

First Published Apr 10, 2024, 12:02 PM IST

கோடையில் கல்குழந்தைகள் விளையாட்டும் போது அவர்கள் தலைமுடி அழுக்கு, வியர்வையால் சேதமாகிவிடும். இத்தகைய சூழ்நிலையில், அவர்களின் தலைமுடியை பராமரிப்பது எப்படி என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

கோடை காலம் வந்தாலே கூடவே பொடுகு, முடி வறட்சி, உதிர்வு, உச்சந்தலையில் அரிப்பு போன்ற பிரச்சினைகள் வரும். நமக்கே இந்த நிலை என்றால், குழந்தைகளை பற்றி சொல்லவா வேண்டும். கோடை வெயில் தாக்கத்தால், குழந்தைகளின் மென்மையான முடி கடுமையாக பாதிக்கப்படும். முடி உதிர்வு, வறட்சி, முடி உடைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே, இதிலிருந்து குழந்தைகளின் தலைமுடியை எப்படி 
பராமரிப்பது என்பதை குறித்து இங்கு பார்க்கலாம். 

இறுக்கமான ஹேர்ஸ்டைல்: குழந்தைகளைப் போலவே அவர்களுடைய முடியும் மென்மையானது என்பதால், அவர்களுக்கு இறுக்கமான ஹேர்ஸ்டைல் செய்வதை கோடை காலத்தில் தவிர்ப்பது நல்லது. அப்படி செய்தால் அவர்களின் தலைமுடி சேதம் அடையும். மற்ற பருவத்திலும் இதை நீங்கள் பின்பற்றினால் கூட நல்லதுதான்.
 

childrens food

உணவுகள்: குழந்தைகளின் தலைமுடி ஆரோக்கியமாக இருக்க ஆரோக்கியமாக உணவுகளை கொடுங்கள். அவை தலைமுடியை பாதுகாக்க பெரிதும் உதவும். எனவே, பாதாம், அக்ரூட், சியா மற்றும் பூசணி விதைகள் ஆகியவற்றை குழந்தைகளுக்கு தினமும் சாப்பிட கொடுங்கள். அதுபோல, குழந்தைகள் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், கோடை காலத்தில் குழந்தைகளுக்கு உணவும் நீரும் மிகவும் அவசியம்.
 

முடியில் சிக்கு: பொதுவாகவே, கோடை வெயில் தாக்கத்தால் குழந்தைகளுடைய தலைமுடியில் சிக்கு  அதிகமாகவே வரும். எனவே, பொற்றோர்களே அவற்றை மென்மையான முறையில் நீக்க முயற்சி செய்யுங்கள். அதற்கு மெல்லிய பற்கள் கொண்ட குழந்தைகளுக்கான சீப்பை பயன்படுத்துங்கள்.

இதையும் படிங்க: உங்கள் குழந்தை ஒல்லியா இருக்கிறார்கள் என்று கவலையா..? இந்த சூப்பர்ஃபுட்களைக் கொடுங்க...

முடியில் ஈரப்பதம்: கோடையில் குழந்தைகளின் தலைமுடியில் ஈரப்பதம் இருப்பது அவசியம். காரணம், அவர்களின் முடி வறட்சியாக இருந்தால் முடி உதிர்வு அதிகரிக்கும். இதற்கு எண்ணெய் ஷாம்பூவை பயன்படுத்துங்கள். இதனால் குழந்தைகளின் முடி மென்மையாகவும், ஈரப்பதமாகவும் இருக்கும். 

இதையும் படிங்க:  Parenting Tips : உங்கள் குழந்தை சின்ன விஷயத்திற்கு கூட அழுறாங்களா? அவர்களை வலிமையாக சில டிப்ஸ் இதோ!

தொப்பி: கோடையில் குழந்தைகளின் தலைமுடி சூரியனின் புற ஊதாக் கதிர்களால் சேதமாகாமல் இருக்க, அவர்களை வெளியில் அழைத்து செல்லும் போது அவர்களின் தலைக்கு தொப்பி அல்லது ஸ்கார்ப் போடுங்கள். இதனால் அவர்களுடைய தலைமுடி சேதமாகாமல் பாதுகாக்கப்படும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!