ஓபிஎஸ் தீவிர ஆதரவாளர் திமுகவில் இணைகிறாரா? பரபரக்கும் அரசியல் வட்டாரம்..!

First Published Apr 28, 2024, 11:07 AM IST

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி திமுகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Bangalore Pugazhendi

ஜெயலலிதா இருந்த போது அதிமுகவின் கர்நாடக மாநில செயலாளராக பெங்களூரு புகழேந்தி இருந்து வந்தார். பின்னர் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விவகாரங்களை கவனித்துக் கொண்டிருந்தார். இதன் மூலம் சசிகலா மற்றும் ஜெயலலிதாவிடம் நல்ல நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். பின்னர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். சசிகலா சிறை சென்றதும் டிடிவி.தினகரனின் அமமுகவில் இணைந்தார். 

Edappadi Palanisamy

பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமமுகவில் இருந்து விலகி ஓபிஎஸ், இபிஎஸ் முன்னிலையில் மீண்டும் தாய் கழகத்தில் இணைந்தார். அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி அன்புமணி விமர்சித்ததால் பாமகவை கடுமையாக விமர்சித்து லெப்ட் ரைட் வாங்கியதால் புகழேந்தி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். 

O. Panneerselvam

பின்னர், ஓபிஎஸ் அணியில் இணைந்தார். ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் சுயேச்சையாக போட்டியிட்ட நிலையில் வேட்பு மனு பரிசீலனை நாள் வரை ராமநாதபுரத்தில் இருந்த பெங்களூரு புகழேந்தி. பின்னர் ஒரு முறை கூட பிரச்சாரத்துக்கு செல்லவில்லை. இதனால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. 

Pugazhendi Join DMK

அதேபோல் ஏப்ரல் 19ம் தேதி கிருஷ்ணகிரி தொகுதி ஓசூரில் வாக்களித்த புகழேந்தி அதற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: மதத்தின் பெயரால் கடவுளின் பெயரால் இந்த நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களித்துள்ளேன் என்றார். அவரது கூறுவதை பார்த்தால் பாஜகவுக்கு எதிராக வாக்கு அளித்ததை வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தங்க தமிழ்செல்வன் மூலமாக பெங்களூரு புகழேந்தியிடம் ரகசிய பேச்சுவார்ததை நடத்தி வருவதாகவும் விரைவில் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!