KKR & SRH அணியில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய வீரர்கள் யாருமில்லை – ஷ்ரேயாஸ், நட்டு, ரிங்கு, புவி!

First Published May 25, 2024, 10:54 AM IST

ஐபிஎல் 2024 இறுதிப் போட்டிக்கு வந்த KKR & SRH அணிகளில் டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்ற இந்திய வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

KKR vs SRH

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இதுவரையில் நடைபெற்ற 16 சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மட்டுமே தலா 5 முறை டிராபி வென்றுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 முறை டிராபியை கைப்பற்றியுள்ளது.

KKR vs SRH

ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெக்கான் சார்ஜர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு முறை டிராபியை வென்றுள்ளன. இதையடுத்து 17ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடரில் இடம் பெற்ற 10 அணிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

Latest Videos


KKR vs SRH

இதில், முதல் குவாலிஃபையர் சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2ஆவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியது.

KKR vs SRH IPL 2024

நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் 2 சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நாளை 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

KKR vs SRH IPL Final

இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த இரு அணிகளிலும், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்ற வீரர்கள் எவரும் இல்லை. குவாலிஃபையர் 2 சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சாஹல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஆவேஷ் கான் ரிசர்வ் பிளேயராக அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

KKR vs SRH IPL Final 2024

ஆனால், கொல்கத்தா அணியில் இடம் பெற்று விளையாடி வரும் ரிங்கு சிங், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிசர்வ் பிளேயராக இடம் பெற்றிருக்கிறார். தமிழக வீரரான நடராஜனுக்கு உலகக் கோப்பையில் இடம் அளிக்கப்படவில்லை. இவரைப் போன்று அனுபவ வீரரான புவனேஷ்வர் குமாருக்கும், ஷ்ரேயாஸ் ஐயருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

click me!