Premgi : பெரியப்பாவிடம் ஆசிபெற்ற பிரேம்ஜி... புதுமண ஜோடியை புன்னகையுடன் வாழ்த்திய இளையராஜா - வைரலாகும் போட்டோ

First Published Jun 13, 2024, 10:10 AM IST

புதிதாக திருமணம் செய்துகொண்ட பிரேம்ஜி மற்றும் இந்து தம்பதியை இசைஞானி இளையராஜா நேரில் அழைத்து வாழ்த்தி இருக்கிறார்.

premgi wife indu

தமிழ் திரையுலகில் பாடகராக அறிமுகமாகி பின்னர் நகைச்சுவை நடிகராக கலக்கி வருபவர் பிரேம்ஜி அமரன். இளையராஜாவின் தம்பி கங்கை அமரனின் மகனான பிரேம்ஜி, 45 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே வலம் வந்து கொண்டிருந்தார். தற்போது பிரேம்ஜி விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து வந்தாலும் அவரை பார்ப்பவர்கள் கோட் பட அப்டேட் கேட்கிறார்களோ இல்லையோ, முதலில் கேட்பது எப்போ கல்யாணம் என்பது தான்.

premgi wedding

இப்படி கல்யாணம் பற்றி தொடர்ந்து கேள்விகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கு சர்ப்ரைஸாக ஒரு அறிவிப்பை வெளியிட்ட பிரேம்ஜி தன் திருமண பத்திரிகையையும் இணையத்தில் பகிர்ந்தார். முதலில் இது ஏதேனும் படத்தின் புரமோஷனாக இருக்கும் என சிலர் எண்ணி வந்த நிலையில், பிரேம்ஜிக்கு நிஜமாகவே திருமணம் ஆகப்போகிறது என்பதை இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய அறிக்கை மூலம் உறுதிப்படுத்தினார்.

இதையும் படியுங்கள்... GV Prakash : இசை அசுரன் ஜிவி பிரகாஷ் இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா? வியக்க வைக்கும் GV-ன் Net Worth இதோ

Premgi marriage

பிரேம்ஜியின் தனது நீண்ட நாள் காதலியான இந்துவை கடந்த ஜூன் 9-ந் தேதி திருத்தணியில் உள்ள முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இருப்பினும் பிரேம்ஜியின் பெரியப்பா இளையராஜாவும் அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. இது இணையத்தில் பேசு பொருள் ஆனது.

premgi and Indu meet Ilaiyaraaja

கங்கை அமரன் உடன் இளையராஜா சண்டை போட்டதால் அவர் பிரேம்ஜி திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை என்றெல்லாம் செய்திகள் உலா வந்தன. இந்த நிலையில், இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திருமணம் முடிந்த கையோடு இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றிருக்கின்றனர் பிரேம்ஜி - இந்து ஜோடி. அவர்களை வாழ்த்தி, புன்னகை பொங்க புதுமண ஜோடியுடன் இளையராஜா போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... புஸ்சுனு போன ‘புஷ்பா 2’ பிசினஸ்... வேறுவழியின்றி ரிலீஸ் தேதியை மாற்றும் படக்குழு - ‘கோட்’ உடன் மோதுகிறதா?

Latest Videos

click me!