கண் பாதுகாப்புக்கு கேரண்டி கொடுக்கும் தரமான ஸ்மார்ட்போன்! எப்படி இருக்கு Moto S50 Neo?

By SG BalanFirst Published Jun 26, 2024, 12:13 AM IST
Highlights

Moto S50 Neo 6.7-இன்ச் முழு-HD+ pOLED டிஸ்பிளே கொண்டது. கண் பாதுகாப்புக்கான SGS சான்றிதழைப் பெற்றுள்ளது. 50-மெகாபிக்சல் Sony IMX882 முதன்மை சென்சாருடன் ட்ரிபிள் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா நிறுவனத்தின் Moto S50 Neo ஸ்மார்ட்போன் செவ்வாய்க்கிழமை சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் Moto Razr 50 சீரிஸ் உடன் வெளியிடப்பட்டது. Moto S50 Neo ஸ்மார்ட்போனுக்கு நான்கு வருட உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் வளைந்த POLED டிஸ்பிளே, பின்புறத்தில் 50 மெகாபிக்சல் டபுள் கேமரா, டால்பி அட்மாஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த மொபைலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் ஜென் 3 சிப்செட் இருக்கிறது. 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

Latest Videos

சீனாவில் Moto S50 Neo மொபைல் 8GB + 256GB, 12GB + 256GB மற்றும் 12GB + 512GB என்று மூன்று வேரியண்ட்களில் வெளியாகியுள்ளது. கருப்பு, நீலம், பச்சை என மூன்று கலர் ஆப்ஷன்களும் உள்ளன. லெனோவா சைனா இ-ஸ்டோர் வழியாக ஜூன் 28ஆம் தேதி முதல் இந்த மொபைல் விற்பனைக்குக் கிடைக்கும்.

முதல் முறையாக நிலவின் மண் மாதிரியை பூமிக்குக் கொண்டுவந்த சீனா! விண்வெளி துறையில் புதிய சாதனை!

Moto S50 Neo 6.7-இன்ச் முழு-HD+ pOLED டிஸ்பிளே கொண்டது. கண் பாதுகாப்புக்கான SGS சான்றிதழைப் பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா அமைப்பு 50-மெகாபிக்சல் Sony IMX882 முதன்மை சென்சார், 8-மெகாபிக்சல் சென்சார் மற்றும் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டது. 32 மெகாபிக்சல் சென்சார் கொண்ட செல்ஃபி கேமராவும் இருக்கிறது.

5G, 4G, வைஃபை, புளூடூத், USB Type-C போர்ட் போன்ற முக்கியமான அடிப்படை வசதிகளும் உள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் உலகளாவிய விற்பனை பற்றியோ இந்தியாவில் வெளியாவது பற்றியோ மோட்டோ தகவல் ஏதும் வெளியிடவில்லை.

இந்திய மதிப்பில் இந்த மொபைலின் 8GB + 256GB வேரியண்ட் விலை 16,100 ரூபாய். இதேபோல, 12GB + 256GB வேரியண்ட் விலை ரூ.Rs.18,400 ஆகவும் 12GB + 512GB வேரியண்ட் ரூ.21,800 ஆகவும் உள்ளது.

உடல் எடையை குறைத்து ஆயுளைக் கூட்டும் சிம்பிள் டிப்ஸ்! தினமும் இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!

click me!