Shriya Saran Trolls: அட...சீ படவாய்ப்புக்காக இப்படியா..? நடிகை ஸ்ரேயாவில் செயலை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..

First Published May 23, 2022, 2:25 PM IST

Shriya Saran Trolls: நீச்சல் உடையில் ரசிகர்களை கவரும் வகையில், நடிகை ஸ்ரேயா வெளியிட்டுள்ள  போட்டோ வைரலானதை தொடர்ந்து, நெட்டிசன்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

Shriya saran

தமிழ் சினிமாவில்ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மழை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ரேயா. இதையடுத்து, இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ், விஜய், விக்ரம், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர்.

Shriya saran

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ரேயா. திரைப்படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் போதே, கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரோ கோஸ்சீவ்வை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

மேலும், தனது கணவருடன் வெளிநாட்டில் செட்டிலான ஸ்ரேயாவிற்கு அழகிய பெண் குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து, திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா தற்போது, கன்னடத்தில் உருவாக உள்ள பான் இந்தியா படமான கப்ஸா திரைப்படத்தில் மதுமதி என்ற அரசு குடும்ப கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முன்னதாக,  இந்திய அளவில் வரவேற்பை பெற்ற ''ஆர் ஆர் ஆர்'' படத்தில் அஜய் தேவ்கனுக்கு மனைவியாக நடித்திருந்தார்.

இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா அவ்வப்போது தன்னுடைய கணவருடன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை வெறுப்பேற்றி வருகிறார். 

அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் ரசிகர்களை கவரும் வகையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் வைரலானதை தொடர்ந்து, பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதில் நெட்டிசன்கள் சிலர் எதுக்கு இந்த கவர்ச்சி எல்லாம்...படவாய்ப்புக்காக தானே..? என்று  ட்ரோல் செய்து வருகின்றனர். 

 மேலும் படிக்க....கல்யாணம் குறித்த கேள்விக்கு கியாரா அத்வானியின் பளிச் பதில்...உறவு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி ...

click me!