புர்ஜ் கலீஃபாவை விட விலை உயர்ந்த முகேஷ் அம்பானியின் பிரம்மாண்ட வீடு.. இத்தனை கோடியா?

First Published Apr 26, 2024, 9:48 PM IST

மும்பையின் உயர்மட்ட அல்டாமவுண்ட் சாலையில் உள்ள ஆண்டிலியா என்ற ஆடம்பர பங்களாவில் அம்பானி குடும்பம் வசித்து வருகிறது

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனரான முகேஷ் அம்பானி ஆசியாவின் நம்பர் 1 பெரும் பணக்காரராக இருக்கிறார். உலகின் பணக்கார கோடீஸ்வரர்களின் போர்ப்ஸ் பட்டியலில், அம்பானி தற்போது 12வது இடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு 95.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 7,93,826 கோடி) ஆகும்

பலர் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத வாழ்க்கையை அம்பானியும் அவரின் குடும்பத்தினரும் வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த தனது மகன் ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிகள் பேசு பொருளாக மாறியது.

மும்பையின் உயர்மட்ட அல்டாமவுண்ட் சாலையில் உள்ள ஆண்டிலியா என்ற ஆடம்பர பங்களாவில் அம்பானி குடும்பம் வசித்து வருகிறது. அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள புராண தீவின் பெயரான ஆண்டிலியா என்ற பெயரை தனது பங்களாவுக்கு வைத்தார் நீதா அம்பானி.

Antilia

ஆண்டிலியா ஒரு வீடு மட்டுமல்ல, ஆடம்பரத்தின் சின்னமாகவும் உள்ளது. இங்கு முகேஷ் அம்பானி, அவரது தாய் கோகிலா பென், மனைவி நீதா, மகன்கள் ஆகாஷ் மற்றும் ஆனந்த், மருமகள் ஸ்லோகா மற்றும் பேரன் பிருத்வி ஆகியோர் வசித்து வருகின்றனர்.

சுமார் $2.2 பில்லியனுக்கும் மதிப்புள்ள இந்த பங்களா, உலகளவில் இரண்டாவது மிக விலையுயர்ந்த வீடாக உள்ளது. ஆன்டிலியாவில் மூன்று ஹெலிபேடுகள், 168 கார்களுக்கான இடம், 50 இருக்கைகள் கொண்ட தியேட்டர், தோட்டங்கள், யோகா ஸ்டுடியோ, நீச்சல்குளம், ஸ்பா மற்றும் கோயில் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் இங்கு கார்களை சர்வீஸ் செய்ய 7வது மாடியில் சர்வீஸ் ஸ்டேஷன் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரம்மாண்ட வீடு இரண்டு அமெரிக்க நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டது, 2004 இல் தொடங்கப்பட்ட இதன் கட்டுமான பணி 2010 இல் முடிவடைந்தது. அம்பானி குடும்பம் 2011 ஆம் ஆண்டு இந்த வீட்டிற்கு குடிபெயர்ந்தது. இந்த ஆடம்பர வீட்டின் கட்டுமானத்துக்கு ரூ.15000 கோடி செலவானதாக கூறப்படுகிறது. எனவே உலகிலெயே அதிக செலவில் கட்டப்பட்ட கட்டிடம் இதுதான்.

Fact Check

உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா, 828 மீட்டர் உயரத்தில் 163 மாடிகளுடன் உள்ளது. இது $1.5 பில்லியன் செலவில் கட்டப்பட்டது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.12500 கோடி செலவானதாக கூறப்படுகிறது.. எனவே 15000 கோடி மதிப்பிலான ஆண்டிலியா, செலவில் புர்ஜ் கலீஃபாவை மிஞ்சியுள்ளது என்பது சுவாரஸ்யமானது. புர்ஜ் கலீஃபா புகழ்பெற்ற கட்டுமான பொறியியல் நிறுவனமான 'ஸ்கிட்மோர், ஓவிங்ஸ் மற்றும் மெரில்' மூலம் கட்டப்பட்டது. அட்ரியன் ஸ்மித் தலைமையிலான குழுவால் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!