முதல்வன் முதல் ஆட்டோகிராப் வரை... நடிகர் விஜய் நடிக்க மறுத்து பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்களின் லிஸ்ட் இதோ

First Published Feb 2, 2024, 3:43 PM IST

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிக்க மறுத்து பின்னர் வேறு ஒரு நடிகர் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன படங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

Thalapathy Vijay Rejected Movies

தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் விஜய். சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் இவருக்கென தனி ரசிகர் படையையே உருவாக்கி வைத்திருக்கிறார். நடிகர் விஜய் நிராகரித்த படங்கள் ஏராளம், அதில் அவர் நடிக்க மறுத்து பின்னர் வேறொரு நடிகர் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

முதல்வன் (Mudhalvan)

ஷங்கர் இயக்கத்தில் அரசியல் கதையம்சம் கொண்ட படமாக வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் தான் முதல்வன். இப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது விஜய் தான். படத்தில் அரசியல் இருந்த காரணத்தால் அவர் நடிக்க மறுத்ததை அடுத்து அர்ஜுன் நடித்து இப்படம் வெற்றி பெற்றது.

Latest Videos


உன்னை நினைத்து (UNNAI NINAITHU)

விக்ரமன் இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படம் தான் உன்னை நினைத்து. இப்படத்திலும் விஜய் தான் முதன்முதலில் ஹீரோவாக நடித்தார். அவரை வைத்து சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், கதையில் திருப்தி இல்லாததால் அதில் இருந்து வெளியேறினார் விஜய். பின்னர் சூர்யா நடித்து இப்படம் வெற்றியடைந்தது.

சண்டக்கோழி (sandakozhi)

விஷாலின் கெரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும் சண்டக்கோழி படத்தின் கதையை முதன்முதலில் விஜய்க்கு தான் சொன்னாராம் லிங்குசாமி. கதையை இண்டர்வெல் வரை கேட்ட விஜய், ராஜ்கிரண் கேரக்டருக்கு ஸ்கோப் அதிகம் இருந்ததால் நடிக்க மறுத்துவிட்டார். அதன்பின் விஷால் நடித்து வேறலெவல் ஹிட் ஆனது இப்படம்.

ஆட்டோகிராப் (Autograph)

சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படத்திலும் விஜய் தான் நடிக்க இருந்தாராம். விஜய்க்கு கதை பிடித்துப்போய் ஷூட்டிங் தொடங்க இருந்த நிலையில், கால்ஷீட் பிரச்சனை காரணமாக இதில் இருந்து விலகிவிட்டாராம். பின்னர் வேறுவழியின்றி சேரனே இப்படத்தில் ஹீரோவாக நடித்து வெற்றிகண்டார்.

இதையும் படியுங்கள்... பெயரில் திராவிடம் இல்லாததே பெரிய மாறுதல்தான்... விஜய்யின் அரசியல் எண்ட்ரி குறித்து சீமான் சொன்னதென்ன?

ரன் (Run)

மாதவன் - லிங்குசாமி கூட்டணியில் உருவாகி வெற்றிபெற்ற திரைப்படம் தான் ரன். இப்படத்தின் கதையை முதலில் விஜய் மற்றும் அஜித்துக்கு தான் சொன்னாராம் லிங்குசாமி. இருவருமே நடிக்க மறுத்ததால் மாதவனை ஆக்‌ஷன் ஹீரோவாக நடிக்க வைத்து அதில் வெற்றியையும் ருசித்தார் லிங்குசாமி.

தூள் (Dhool)

தரணி இயக்கத்தில் விக்ரம் நடித்த மாஸ் ஹிட் திரைப்படமான தூள் படத்தின் கதையை விஜய்யை மனதில் வைத்து எழுதினாராம் இயக்குனர். ஆனால் விஜய் நடிக்க மறுத்ததால் விக்ரமுக்கு அந்த வாய்ப்பு சென்றது.

வேட்டை (Vettai)

வேட்டை படத்தை விஜய் மற்றும் சிம்புவை வைத்து தான் எடுக்க திட்டமிட்டாராம் லிங்குசாமி. ஆனால் இருவருமே கதை கேட்டு நடிக்க மறுத்ததை அடுத்து மாதவன் மற்றும் ஆர்யாவை வைத்து அப்படத்தை எடுத்திருக்கிறார் லிங்குசாமி.

உள்ளத்தை அள்ளித்தா (Ullaithai Allitha)

சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் உள்ளத்தை அள்ளித்தா. கார்த்திக் ஹீரோவாக நடித்த இப்படத்தில் முதன்முதலில் விஜய் தான் நடிக்க இருந்தாராம். சில காரணங்களால் அவர் விலகியதை அடுத்து அந்த வாய்ப்பு கார்த்திக்கிற்கு சென்றிருக்கிறது.

இதையும் படியுங்கள்... ரஜினி - கமலை விட விஜய் எவ்வளவோ மேல்! ஆனால் இது யாருக்கு எதிரான அரசியல்? ப்ளூ சட்டை போட்ட நச் பதிவு!

click me!