காகம் தலையில் தட்டினால் அசுபமா..? இதற்கு பரிகாரம் உண்டா..?

First Published | Sep 6, 2024, 9:28 AM IST

Crow Hits On Head : காகம் நம்முடைய தலையை தட்டி செல்வது சாதாரண விஷயம் அல்ல. அது அசுபமாக பார்க்கப்படுகிறது. இதற்கு நாம் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

நாம் வீதியில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது சில சமயங்களில், காகம் நம்முடைய தலையில் உரசி விட்டு செல்லும். இதற்கு காரணம் நாம் நம்முடைய முன்னோர்களின் வழிபட மறந்திருந்தாலோ அல்லது அவர்களுக்கு உரிய காலத்தில் திதி கொடுக்க மறந்திருந்தாலோ, அவர்கள் காகத்தின் ரூபத்தில் வந்து நமக்கு நினைவூட்டுவார்கள் என்று அர்த்தம். 

அதுமட்டுமின்றி, உங்களது வாழ்க்கையில் சனியின் தாக்கம் ஆரம்பமாகப் போகிறது. இதனால் நீங்கள் பல பிரச்சினைகளை சந்திக்க போகிறீர்கள் என்பதால், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக தான், உங்களது முன்னோர்கள் காகத்தின் ரூபத்தில் வந்து உங்களை எச்சரிக்கை இருக்கிறார்கள் என்று மற்றோறு அர்த்தம்.

காகம் தலையில் தட்டினால் செய்ய வேண்டிய பரிகாரம் : காகம் உங்களது தலையில் உரசி சென்றால் வீட்டிற்கு வந்த உடனே நல்லெண்ணெயை தலையின் உச்சியில் வைத்து பிறகு குலதெய்வத்தை வழிபடுங்கள். அதுபோல சனி பகவானை சாந்தப்படுத்த, ஏதாவது ஆறு, குளங்களில் நீராடி விட்டு, பிறகு முழு பயபக்தியுடன் சனி பகவானின் கோயிலுக்கு சென்று, சனி பகவானுக்கு எள்தீபம் ஏற்றி முறைப்படி பரிகாரம் செய்யுங்கள். இப்படி செய்வதன் மூலம் சனிபகவான் கண்டிப்பாக உங்கள் மீது இரக்கம் காட்டுவார். அதுமட்டுமின்றி, காகத்திற்கு உணவளியுங்கள். 

மேலும், அடுத்து வரும் அம்மாவாசை நாளில் முன்னோர்களுக்கு முழு படையில் போட்டு அவர்களை மனதார வழிபடுங்கள். உங்களால் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவி செய்யுங்கள். குறிப்பாக மாற்றித்திறனாளிகளுக்கு.

இதையும் படிங்க:  கனவில் காகம் வந்தால் கெட்டதா? இதை நீங்கள் உணர்ந்ததுண்டா?

Tap to resize

காகத்தை குறித்து சாஸ்திரங்கள் சொல்வது என்ன? : நீங்கள் காகத்திற்கு உணவளிக்கும் போது காகம் உங்களுக்கு முன்பாக சாப்பிட ஆரம்பித்தால், அது நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. இதன் மூலம் உங்களது அனைத்து ஆசைகளும் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது.

நீங்கள் வீதியில் நடந்து செல்லும் போது, காகம் தண்ணீர் குடிப்பதை பார்ப்பது சுபமாக கருதப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் நிறைய பணம் சம்பாதிக்க போகிறீர்கள் என்பதை குறிக்கிறது. அதுபோல வீட்டின் கிழக்கில் அதுவும் காலை வேளையில் காகம் கரைவதை பார்ப்பது சுபமாகும்.

நீங்கள் வேலைக்கு செல்லும் போது காகத்தை பார்ப்பது நல்ல அறிகுறியாகும். இதனால் அந்நாளில் நீங்கள் செய்யும் வேலைகள் அனைத்தும் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது.

உங்களது வீட்டின் பால்கனியில் காகம் அதன் வாயில் ஏதாவது ஒன்றை வைத்துக் கொண்டு வந்தால், அது நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. இதன் மூலம் உங்கள் வீட்டில் அதிர்ஷ்டம் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. 

மேலும் உங்கள் வீட்டு மாடியை சுற்றி பல காகங்கள் ஒன்றாக கூவி வந்தால் அது சுபமாக கருதப்படுகிறது. நீங்கள் கோவிலில் காகத்தை பார்ப்பது சுபம் ஆகும். இதனால் உங்களது வாழ்க்கையில் பணம், சொத்து அதிகரிக்கும். ஆனால், உங்கள் வீட்டின் தெற்கு பகுதியில் காகங்கள் உலா வருவது அசுபமான அறிகுறியாகும்.

இதையும் படிங்க:  காகம் உணர்த்தும் ஜோதிடப் பலன்...! நல்லது முதல்... கெட்டது வரை...!

Latest Videos

click me!