PAK vs BAN Test
வங்கதேசத்தின் அடுத்த டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இந்தியா வரும் வங்கதேச அணியானது 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் கட்டமாக இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.
சென்னையில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 19 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கு முன்னதாக பாகிஸ்தானில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்று பெற்ற வெற்றி வங்கதேச அணிக்கு டானிக்காக இருக்கும்.
அதுமட்டுமின்றி பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேச அணி படைத்த 5 அற்புதமான சாதனைகள் என்னென்ன பார்க்கலாம் வாங்க…
Bangladesh Test Records against Pakistan
வங்கதேச அணியைப் பொறுத்த வரையில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியானது சுவாரஸ்யமாக முடிவடைந்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வங்கதேசம் 2-0 என்று கைப்பற்றியது.
அதோடு மட்டுமின்றி இந்த போட்டியில் 5 முக்கியமான சாதனைகள் படைக்கப்பட்டன. இதுவரையில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஜெயிக்காத வங்கதேச முதல் முறையாக வெற்றி பெற்று பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்றில் மறக்க முடியாத முத்திரையை பதித்துள்ளது.
இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக வங்கதேசம் படைத்த அந்த 5 சாதனைகள் என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க.
PAK vs BAN Test Series
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடர் வெற்றி:
பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்று வெற்றி பெறுவது என்பது வங்கதேச அணிக்கு இதுவே முதல் முறை.
பாகிஸ்தானில் முதல் டெஸ்ட் தொடர் வெற்றி:
ராவல்பிண்டியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான 2 டெஸ்டிலும் வங்கதேசம் வெற்றி பெற்றது. இதன்மூலம் பாகிஸ்தானில் தனது முதல் டெஸ்ட் தொடர் வெற்றியை பதிவு செய்து வரலாற்று சாதனை படைத்தது.
வேகப்பந்து வீச்சாளர்கள் எடுத்த 10 விக்கெட்டுகள்:
பாகிஸ்தானுக்கு எதிரான வங்கதேசத்தின் வெற்றியில் வங்கதேசத்தின் வேகப்பந்து வீச்சாளர்கள் பெரும் பங்கு வகித்தனர். இந்த தொடரில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டி இதுவரையில் இல்லாத வகையில் 10 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தனர்.
PAK vs BAN Test Cricket
முதல் முறையாக, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பாகிஸ்தானில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸில் வங்கதேசம் இந்த சாதனையை படைத்தது.
முதல் முறையாக 5 விக்கெட்டுகள்:
வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மஹமூத் தனது டெஸ்ட் வாழ்க்கையில் முதல் முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். ராவல்பிண்டியில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். ஹசன் மஹ்மூத் 10.4 ஓவர்களில் 43 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
Pakistan vs Bangladesh Test
அதிக விக்கெட்டுகள்:
வேகத்திற்கு பெயர் போன பாகிஸ்தான் பவுலர்களை விட வங்கதேச வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றினர். ராவல்பிண்டியில் நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களால் இரட்டை இலக்க ஸ்கோரை கூட எட்ட முடியவில்லை.