Virat Kohli:எம்.எஸ்.தோனி, சச்சினை பின்னுக்கு தள்ளி அதிகபட்சமாக ரூ.66 கோடி வரையில் வரி செலுத்தும் விராட் கோலி!

First Published | Sep 6, 2024, 8:08 AM IST

Highest Tax Paid Cricket Players: கிரிக்கெட் வீரர்கள் அதிக வருமானம் ஈட்டுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அவர்கள் அதிக வரி செலுத்துவதிலும் முன்னணியில் உள்ளனர். 2023-24 நிதியாண்டில் அதிக வரி செலுத்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை பார்ச்சூன் இந்தியா வெளியிட்டுள்ளது.

Highest Tax-Paying Cricketer

உலகம் முழுவதும் அதிக ரசிகர்கள் பட்டாளங்களை கொண்ட ஒரே ஒரு விளையாட்டு எது என்றால் அது கிரிக்கெட் மட்டுமே. ஒவ்வொரு ரசிகரும் மற்ற விளையாட்டுகளை விட கிரிக்கெட் விளையாடவே விரும்புகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை. மேலும், அதிக வருமானம் தரக் கூடிய பணக்கார விளையாட்டாகவும் கிரிக்கெட் விளங்குகிறது.

கிரிக்கெட் மூலமாக அதிக வருமானம் ஈட்டிய பிரபலங்களின் பட்டியலில் விராட் கோலி, எம்.எஸ்.தோனி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் டாப் இடங்களில் இடம் பெற்றுள்ளனர். விராட் கோலியின் நிகர சொத்து மதிப்பு ரூ.1050 கோடி ஆகும். இதே போன்று இந்திய அணியின் கூல் கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ்.தோனியின் நிகர சொத்து மதிப்பு ரூ.1040 கோடி ஆகும்.

Highest Paid Cricketer In India

இந்திய அணியில் மட்டுமின்றி ஐபிஎல் கிரிகெட்டில் விளையாடுவதன் மூலமாகவும் கிரிக்கெட் வீரர்கள் அதிக வருமானம் ஈட்டி வருகின்றனர். பிராண்ட் ஒப்பந்தங்கள் மூலமாகவும் கிரிக்கெட் வீரர்கள் பெரும் பணத்தை சம்பாதிக்கின்றனர்.

இந்த நிலையில் தான் தனது வருமானத்தில் பெரும் தொகையை வரியாக செலுத்தும் கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை பார்ச்சூன் இந்தியா வெளியிட்டது. அதன்படி, 2023 – 2024 ஆம் ஆண்டு நிதியாண்டில் அதிக வரி செலுத்திய கிரிக்கெட் வீரர் மற்றும் விளையாட்டு வீரர்களின் பட்டியலி ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி முன்னணியில் உள்ளார்.

Latest Videos


Highest Tax-Paying Cricketer Player

இதில் என்ன சுவாரஸ்யம் என்றால், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் கூட சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம்.எஸ்.தோனி இருவரும் இணைந்து எவ்வளவு தொகையை செலுத்துகிறார்களோ அந்த தொகையை தனி ஒருவராக விராட் கோலி செலுத்துகிறார்.

2008 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வரும் ஏராளமான சாதனைகளை படைத்திருக்கிறார். குறிப்பாக கிரிக்கெட்டின் கடவுள் என்று சொல்லப்படும் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் சாதனையை முறியடித்து புதிய வரலாற்று சாதனையை விராட் கோலி கடந்த ஆண்டு படைத்தார். இந்த சாதனையை எந்த கிரிக்கெட் வீரராலும் படைக்க முடியாது.

Highest Tax Payers in India

மேலும், அதிக முறை தொடர் நாயகன் விருது வென்ற சச்சின் டெண்டுல்கர் (20) சாதனையை விராட் கோலி (21) முறியடித்துள்ளார். இந்த நிலையில் தான் பார்ச்சூன் இந்தியா அறிக்கையின் படி, விராட் கோலி ரூ.66 கோடி வரி செலுத்தி அதிக வரி செலுத்திய வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

எம்.எஸ்.தோனி ரூ.38 கோடியுடன் 2ஆவது இடம் பிடித்துள்ளார். கிரிக்கெட்டின் ஐகான், சச்சின் டெண்டுல்கர் 28 கோடியுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். சவுரவ் கங்குலி 23 கோடியுடன் 4ஆவது இடம் பிடித்துள்ளார்.

தற்போதைய ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் இருவருமே இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். பாண்டியா ரூ.12 கோடியும், பண்ட் ரூ.10 கோடியும் வரி செலுத்துகின்றனர்.

Indian Cricket Player Salary

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எனப்படும் பிசிசிஐ டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான ஊக்கத் திட்டத்தை அறிவித்தது. இது கிரிக்கெட் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தினால் அவர்கள் இன்னும் கூடுதலாக சம்பாதிக்க வெகுமதி அளிக்கும்.

இந்தியா வரும் 19 ஆம் தேதி தொடங்கும் வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. சென்னை, எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தற்போது நடைபெற்று வரும் துலீப் டிராபி தொடர் மூலமாக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு வீரரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

Rohit Sharma How Much Tax Paid Last Year

விராட் கோலி – ரூ. 66 கோடி

எம்.எஸ்.தோனி – ரூ. 38 கோடி

சச்சின் டெண்டுல்கர் – ரூ.  28 கோடி

சவுரவ் கங்குலி – ரூ. 23 கோடி

ஹர்திக் பாண்டியா – ரூ.  12 கோடி

ரிஷப் பண்ட் – ரூ. 10 கோடி

அதிக வரி செலுத்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் டி20 உலகக் கோப்பை டிராபி வென்று கொடுத்த ரோகித் சர்மா இடம் பெறவில்லை.

click me!