Published : Sep 06, 2024, 08:54 AM ISTUpdated : Sep 06, 2024, 09:24 AM IST
GOAT movie Day 1 Box Office Collection : வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடித்துள்ள கோட் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் முதன்முறையாக நடித்த திரைப்படம் கோட். நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் பிரபுதேவா, பிரசாந்த், பிரேம்ஜி, ஜெயராம், மைக் மோகன், வைபவ், அஜ்மல், லைலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
25
GOAT Movie Collection
கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் ஒரு சீக்ரெட் ஏஜண்டாக நடித்துள்ளார். தந்தை மகனுக்கு இடையேயான மோதலை மையமாக வைத்து தான் கோட் படத்தை இயக்கி உள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. இதில் நடிகர் விஜய்யின் இளம் வயது கதாபாத்திரத்திற்காக டீ ஏஜிங் டெக்னாலஜி பயன்படுத்தி உள்ளனர். அதற்கு பாரட்டுக்களும் கிடைத்து வருகிறது. அதுமட்டுமின்றி படத்தில் ஏராளமான சர்ப்ரைஸ் தருணங்களும் நிரம்பி இருக்கிறதாம்.
குறிப்பாக கோட் படத்தில் நடிகர் விஜய்யுடன் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்துள்ளார். அதேபோல் நடிகர் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் மீண்டும் கொண்டு வந்துள்ளனர். கேப்டன் பிரபாகரனாக படத்தில் காட்சியளிக்கிறார் விஜயகாந்த். அதுமட்டுமின்றி நடிகர் விஜய்யுடன் மட்ட பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டுள்ளார் நடிகை த்ரிஷா. அப்படி போடு பாடலில் வரும் ஸ்டெப்புகளை அவர்கள் இப்பாடலில் மீண்டும் ஆடி உள்ளது ரசிக்கும்படியாக உள்ளது.
45
GOAT movie Day 1 Box Office
விஜய் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் படமாக கோட் உள்ளதால் இப்படத்திற்கு பெரும்பாலும் பாசிடிவ் விமர்சனங்களே வந்த வண்ணம் உள்ளன. பொதுவாக விஜய் படம் ரிலீஸ் ஆனால் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது இரண்டு விஷயம் தான். இன்று படத்தின் விமர்சனம், மற்றொன்று படத்தின் வசூல். அதன்படி கோட் திரைப்படம் முதல் நாளில் எத்தனை கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை வாரிக்குவித்துள்ளது என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.
55
GOAT Movie Worldwide Box Office Collection
அந்த வகையில் கோட் திரைப்படத்திற்கு முதல் நாளில் கம்மியான வசூலே கிடைத்துள்ளதாம். லியோ படத்தோடு ஒப்பிடுகையில் அதில் பாதி கூட கோட் படம் வசூலிக்கவில்லை என கூறப்படுகிறது. லியோ திரைப்படம் முதல் நாளில் ரூ.148 கோடி வசூலித்து இருந்தது. ஆனால் கோட் படம் உலகளவில் வெறும் ரூ.73 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் தமிழ் நாட்டில் மட்டும் இப்படம் ரூ.38 கோடி வசூலித்து உள்ளதாம். அதேபோல் அப்படத்தின் தெலுங்கு வெர்ஷன் ரூ.5 கோடியும், இந்தி வெர்ஷன் ரூ.1.7 கோடியும் வசூலித்து இருக்கிறதாம். கேரளாவில் இப்படம் முதல் நாளில் ரூ.2 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ஹைப் இன்றி வெளியானதே இப்படத்தின் வசூல் சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.