
நடிகர் விஜய் கடந்த 1999-ம் ஆண்டு சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் காதலித்து தான் திருமணம் செய்துகொண்டனர். விஜய்யின் தீவிர ரசிகையான சங்கீதா, அவரை பார்க்க வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வந்தபோது தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. சங்கீதா இலங்கையை சேர்ந்தவர், அவரது தந்தை லண்டனில் மிகப்பெரிய பிசினஸ்மேனாகவும் இருந்து வந்தார். இதையடுத்து விஜய் - சங்கீதா ஜோடியின் காதலுக்கு குடும்பத்தினர் பச்சைக்கொடி காட்ட, லண்டனில் நிச்சயதார்த்தமும், சென்னையில் திருமணமும் நடைபெற்றது.
விஜய் சங்கீதா ஜோடிக்கு ஜேசன் சஞ்சய் என்கிற மகனும், சாஷா என்கிற மகளும் உள்ளனர். இதில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தற்போது சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். அவர் இயக்கும் முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யின் மகள் சாஷா லண்டனில் படித்து வருகிறார். மகளுக்காக விஜய்யின் மனைவி சங்கீதாவும் லண்டனுக்கு சென்றுவிட்ட பின்னர் தான் விஜய்யின் விவாகரத்து சர்ச்சை வெடித்தது.
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரை நடிகர் விஜய் தன்னுடைய மனைவி சங்கீதாவை தவறாமல் ஆடியோ லாஞ்சுக்கு அழைத்து வந்துவிடுவார். ஆனால் அதன்பின்னர் வெளியான வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, லியோ சக்சஸ் மீட் போன்றவற்றிற்கு விஜய் மனைவி இன்றி சிங்கிளாகவே வலம் வந்தார். இதனால் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் விஜய் உடன் ஏற்பட்ட சண்டையால் தான் சங்கீதா லண்டனிலேயே இருப்பதாகவும் செய்திகள் உலா வந்தன.
இந்த விவாகரத்து சர்ச்சை உச்சத்தில் இருந்த சமயத்தில் தான் விஜய்யும், த்ரிஷாவும் ஒன்றாக வெளிநாட்டில் ஷாப்பிங் சென்ற புகைப்படம் வெளியாகி இணையத்தில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் அவர்கள் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக பயில்வான் உள்பட சில பத்திரிகையாளர்கள் குண்டை தூக்கிப் போட்டனர். ஆனால் அதற்கெல்லாம் பதிலளிக்காமல் நடிகர் விஜய்யும் அமைதி காத்து வந்ததால் இந்த விவகாரம் பூதாகரமானது.
இதையும் படியுங்கள்... மனைவி சங்கீதா உடன் கோட் படம் பார்த்த விஜய்... FDFS ஷோவில் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் வேறயா?
அண்மையில் கூட விஜய்யின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து த்ரிஷா போட்ட பதிவில் விஜய்யுடன் லிஃப்டில் எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டு இருந்தார். அதில் விஜய்யும், த்ரிஷாவும் கப்பலில் ஜோடியாக சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படம் என பரபரப்பாக பேசப்பட்டது. அதன்பின்னர் த்ரிஷாவின் பழைய போட்டோக்கள் சிலவற்றை ஆராய்ந்த ரசிகர்கள், த்ரிஷாவும், விஜய்யும் ஜோடியாக அடிக்கடி ஊர் சுற்றுவதாக சில ஆதாரங்களை வெளியிட்டனர்.
அதிலும் குறிப்பாக வாரிசு படத்தின் சக்சஸ் மீட்டில் சங்கீதா கலந்துகொள்ளாதபோது த்ரிஷா ஏன் பங்கேற்றார் என்கிற கேள்வியை எழுப்பி வந்தனர். இது போதாது என்று விஜய் வீடருகே நடிகை கீர்த்தி சுரேஷ் குடியேறியதால் அவரையும் விஜய்யுடன் ஒப்பிட்டு சிலர் பேசத் தொடங்கினர். அண்மையில் கீர்த்தி சுரேஷும் விஜய் கட்சியில் சீட் கேட்டு ஒரு பேட்டியில் பேசியதால், அடுத்த எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா ரேஞ்சுக்கு விமர்சிக்க தொடங்கினர்.
இப்படி த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் என விஜய்யுடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் நடிகைகள் பட்டியலை அடுக்கிக் கொண்டே சென்ற நிலையில், இதற்கெல்லாம் சைலண்டாக எண்ட் கார்டு போட்டுள்ளார் தளபதி. நடிகர் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அப்படத்தின் ரிலீசுக்கு முந்தைய நாள் இரவு நடிகர் விஜய் தன்னுடைய பேமிலியுடன் சேர்ந்து கோட் படத்தை பார்த்தாராம். சென்னை அடையாறில் உள்ள ப்ரிவ்யூ தியேட்டரில் விஜய்யின் குடும்பத்தினருக்காக கோட் திரைப்படம் திரையிடப்பட்டதாம்.
அப்போது விஜய் தன்னுடைய மனைவி சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய், மகள் சாஷா, தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா ஆகியோருடன் சேர்ந்து படம் பார்த்தாராம். இந்த நிகழ்வின் போது கோட் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோரும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.
கோட் படம் விஜய் பேமிலிக்கு மிகவும் பிடித்துப் போனதாம். குறிப்பாக விஜய்யின் மனைவி சங்கீதா படம் பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டு இயக்குனர் வெங்கட் பிரபுவை பாராட்டியதாகவும் கூறப்படுகிறது. தன் மனைவி சங்கீதாவுடன் கோட் படம் பார்த்ததன் மூலம் த்ரிஷா உடனான ரிலேஷன்ஷிப் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஜய். அதுமட்டுமின்றி தன்னைப்பற்றிய விவாகரத்து சர்ச்சைக்கும் எண்ட் கார்டு போட்டுள்ள அவர், தான் மனைவியோடு ஹாப்பியாக உள்ளதையும் சூசகமாக சொல்லி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... தளபதிக்கு 200 கோடி சம்பளம்! இயக்குனர் வெங்கட் பிரபு முதல் சினேகா வரை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?