இந்த சூழலில் தான் பிரபல மலையாள திரையுலக நடிகை ரீமா, அண்மையில் வெளியிட்ட ஒரு பதிவில் அடிப்படை ஆதாரங்கள் எதுவுமே இல்லாமல், நடிகை சுசித்ரா இது போன்ற விஷயங்களை பேசுவது முற்றிலும் தவறு. ஒரு தனி மனிதனின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவர் பேசியிருப்பதனால் இதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.
காவல்துறையில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது, அது மட்டும் அல்லாமல் அவதூறு வழக்கில் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறினார். இந்த பிரச்சினையே இன்னும் முடியாத நிலையில், கேரள திரையுலகின் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டதற்கு இதுதான் காரணம் என்று கூறி ஒரு பரபரப்பு தகவலை சுசித்ரா இப்பொழுது பேசியிருக்கிறார்.