
ஏற்கனவே ஏழு சீசன்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, விரைவில் தனது எட்டாவது சீசனை துவங்க உள்ளது. இதுவரை நடந்த இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வந்த நிலையில், இந்த எட்டாவது சீசனை பிரபல நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். ஏற்கனவே அதற்கான பணிகள் துவங்கியுள்ள நிலையில், வருகின்ற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இந்த எட்டாவது சீசன் கோலாகலமாக துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கம்போல சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாத பல போட்டியாளர்கள் இதில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றது. குறிப்பாக TTF வாசன், அவரது காதலி மற்றும் நடிகையான ஷாலினி ஜோயா, தொகுப்பாளர் மாகாபா ஆனந்த், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் இந்த சீசனில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.
அதுமட்டுமல்ல, ஒவ்வொரு முறையும் பிக் பாஸ் வீட்டில் ஏதெனும் ஒரு மாறுதல் இருந்துகொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்வர் மக்கள் செல்வன் தொகுத்து வழங்கப்போகும் இந்த சீசனிலும் நிச்சயம் வித்தியாசமாக ஒரு வீடு அமைக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த நடிகை பிரணீதா! வைரலாகும் புகைப்படம் - குவியும் வாழ்த்து!
இந்த சீசனில் தான் பங்கேற்கவில்லை என்று உலகநாயகன் கமல்ஹாசன் அண்மையில் அறிவித்தார். ஏற்கனவே அவர் ஒப்புக்கொண்ட சில திரைப்பட பணிகள் அதிகமாக இருக்கும் நிலையில், தன்னால் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என்றும், ஆனால் அனைவரும் எதிர்பார்க்கும் வண்ணம் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் தான் அடுத்தபடியாக யார் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்ற யுகங்கள் இணையத்தில் பெரிய அளவில் எழுந்தது. குறிப்பாக ஏற்கனவே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் சிலம்பரசனே அதை முழு நேரமாக தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்பட்டது. அதே போல பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் அல்லது நடிகர் சரத்குமார் உள்ளிட்ட யாரேனும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்ட போது தான், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக அதிகாரப்பூர் அறிவிப்புகள் வெளியானது.
இப்பொது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான ப்ரோமோஷன் வீடியோ எடுக்கும் பணிகள் இப்பொது துவங்கியுள்ளது. இரு படங்களில் நடித்து வரும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, இடையிடையே பிக் பாஸ் பணிகளையும் கவனித்து வருகின்றார்.
இந்நிலையில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த சில யூகங்கள் இணையத்தில் வெளியாக துவங்கியுள்ளது. பொதுவாக ஒரு திரைப்படத்திற்கு 15 முதல் 20 கோடி ரூபாய் வரை விஜய் சேதுபதி சம்பளமாக பெற்று வருகிறார். சிறு சிறு விளம்பரங்களில் நடிக்க அவர் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுவதாகவும் சில தகவல்கள் வெளியாகி வந்தது.
இந்த சூழலில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அவருக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு முன்னதாக இந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய உலக நாயகன் கமல்ஹாசனுக்கு, சுமார் 120 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆகையால் வியாபார ரீதியாக, எதிர்வரும் சீசன்களையும் விஜய் சேதுபதியை வைத்தே தொகுத்து வழங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்போது பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ட்ரெயின் என்கின்ற திரைப்படத்தில் பிஸியாக நடித்த வருகிறார். அதேபோல மற்றொரு திரைப்படத்திலும் அவர் நடித்து வரும் நிலையில், இதற்கு இடையில் தான் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சி ஷூட்டிங் பங்கேற்று வருகிறார்.
இறுதியாக அவருடைய நடிப்பில் வெளியான அவரது ஐம்பதாவது திரைப்படமான மகாராஜா மிகப்பெரிய வரவேற்புகளை பெற்றது. இந்த திரைப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்படத்தின் இயக்குனர் நிதிலன் அவர்களை நேரில் அழைத்து வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.