நடிகை பிரணீதா, இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த நிலையில், தற்போது இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குழந்தையுடன் இவர் வெளியிட்டுள்ள போட்டோவை பார்த்து, ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
முன்னணி நடிகைகள் சிலர் திருமணம் ஆன பின்னர் திரையுலகில் இருந்து விலகி, குடும்பம் - குழந்தை என செட்டில் ஆகி விடுவது வழக்கம். அப்படி திருமணத்திற்கு பின்னர் ஒரேயடியாக திரையுலகிற்கு டாட்டா காட்டிய நடிகை பிரணீதாவுக்கு ஏற்கனவே அழகிய பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில், இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை புகைப்படத்துடன் பிரணீதா தெரிவித்த நிலையில், ரசிகர்கள் மழைபோல் தங்களின் வாழ்த்துக்களை பொழிந்து வருகிறார்கள்.
25
Pranitha Subhash Movies
நடிகை பிரணீதா பெங்களூரை சேர்ந்தவர். கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போதே கன்னட திரைப்படமான 'போர்கி' என்கிற படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்தடுத்து இரண்டு தெலுங்கு படத்தில் நடித்தார். அறிமுகமான உடனேயே படு பிஸியான ஹீரோயினாக மாறிய பிரணீதா, 2011-ஆம் ஆண்டு தமிழிலும் நடிக்க கமிட் ஆனார். அதன்படி இயக்குனர் சாப்ளின் இயக்கத்தில், அருள்நிதி ஹீரோவாக அறிமுகமான 'உதயம்' படத்தில் நடித்தார். இப்படம் தோல்வியை சந்தித்தாலும், தன்னுடைய இரண்டாவது தமிழ் படத்தில் கார்த்திக்கு ஜோடியாகும் வாய்ப்பு இவருக்கு தேடி வந்தது.
இயக்குனர் ஷங்கர் தயால் இயக்கத்தில்... கார்த்தி நடித்த காமெடி மற்றும் ரொமான்டிக் திரைப்படமான 'சகுனி' படத்தில் ஹீரோயினாக நடித்தார். 2012-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் பிரணீதாவை தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. தெலுங்கு - கன்னடம் ஆகிய இரு மொழியிலும் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்ததால், தமிழில் குறைவான படங்களில் மட்டுமே நடித்தார் பிரணீதா... அந்த வகையில் தம்பி கார்த்தியை தொடர்ந்து அண்ணன் சூர்யாவுக்கு ஜோடியாக 'மாஸ்' படத்தில் நடித்திருந்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இப்படம், ஹாரர் மற்றும் காமெடி காட்சிகளுடன் வெளியான ஆக்ஷன் திரைப்படமாகும். இதை தொடர்ந்து அதர்வாவுக்கு ஜோடியாக 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' என்கிற படத்தில் நடித்தார். ஆனால் இந்த இரு படங்களுமே அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது.
45
Pranitha Subhash First baby
பட வாய்ப்புகள் குறைய துவங்கியதும்... சைலண்டாக தன்னுடைய பெற்றோர் பார்த்த தொழிலதிபர் மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டிய பிரணீதா, கொரோனா நேரத்தில் திருமணம் நடந்ததால், எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்தில் இரு வீட்டை சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக புகைப்படம் வெளியிட்டு அறிவித்தார். அதன்படி 2021-ஆம் ஆண்டு இவருக்கும் நிதின் ராஜு என்பவருக்கும் திருமணம் ஆன நிலையில், 2022-ஆம் ஆண்டு பிரணீதாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
கடந்த மாதம் தன்னுடைய மகளின் இரண்டாவது பிறந்த நாளை கொண்டாடிய பிரணீதாவுக்கு... மறுநாளே எளிமையான முறையில் பேபி ஷவர் கொண்டாட்டமும் வெஸ்டன் ஸ்டைலில் நடந்தது. வெள்ளை நிற மாடர்ன் கவுனில், கணவர் மற்றும் குழந்தையுடன் கேக் வெட்டி பேபி ஷவரை என்ஜாய் செய்தார். இதில் மிகவும் முக்கியமான நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். இதுகுறித்த புகைப்படங்களை பிரணீதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட... ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை இவருக்கு தெரிவித்து வந்தனர். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நடிகை பிரணீதாவுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் புகைப்படத்தோடு இவர் வெளியிட்டுள்ள தகவலை தொடர்ந்து ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.