'GOAT' படத்தில் வெங்கட் பிரபு ஒளித்து வைத்திருக்கும் 5 சீக்ரெட்ஸ்! இதுக்காவது மிஸ் பண்ணாம பார்க்கணும்!

First Published | Sep 5, 2024, 7:37 PM IST

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'கோட்' திரைப்படம், இன்று காலை ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், இப்படத்தில் தளபதி விஜய் ஒளித்து வைத்துள்ள 5 சீக்ரெட் தகவலைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
 

Thalapathy Vijay Movies

90-களில் ரொமான்டிக் ஹீரோவாக அறியப்பட்டு... பின்னர் ஜனரஞ்சகமான கதைகளை தேர்வு செய்து நடிக்க துவங்கியவர் தளபதி விஜய். இளம் நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்யும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்த விஜய்யின் இமேஜை மாற்றியது என்றால் அது, இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான 'பூவே உனக்காக' திரைப்படம் தான். இந்த படத்திற்கு பிரியமானவளே, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், சிவகாசி, திருப்பாச்சி, கில்லி என கலக்கல் ஹீரோவாக மாறினார்.

Venkat Prabhu Direct GOAT Movie

சமீப காலமாக, தொடர்ந்து வித்தியாசமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும், விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் 'கோட்'. தளபதி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த படத்தை, அஜித்தை வைத்து மங்காத்தா,  சிம்புவை வைத்து மாநாடு போன்ற படத்தை இயக்கி வெறித்தனமான ஹிட் கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். விஜய் இந்த படத்தில் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி சவுத்திரி ஆகியோர் நடித்துள்ளனர். 

கோவிலில் பிச்சை எடுத்த நடிகருக்கு ஓடி போய் உதவிய கேப்டன் விஜயகாந்த்! சாந்தி வில்லியம்ஸ் பகிர்ந்த தகவல்!

Latest Videos


Actor Thalapathy Vijay film The GOAT release updates out

இவர்களை தவிர, பிரபு தேவா, பிரஷாந்த், அஜ்மல் அமீர், லைலா, மைக் மோகன், பிரேம் ஜி அமரன், யோகி பாபு, பார்வதி நாயர், போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த படத்தை AGS நிறுவனம் சுமார் 400 கோடி பொருட்செலவில் தயாரித்துள்ளது. அதே போல் விஜய் நடிப்பில் வெளியான படங்களில் இதுவரை அதிகப்படியான வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட படம் என்கிற அந்தஸ்தையும் இப்படம் பெற்றுள்ளது. 'கோட்' படம் வெளியாவதற்கு முன்பே... அதவாது ப்ரீ பிஸ்னஸ் மூலமாகவே போட்ட பணத்தை எடுத்து விட்டதாக அர்ச்சனா கல்பாத்தி அறிவித்த நிலையில், திரைப்படத்திற்கு கிடைத்து வரும் பாசிட்டிவ் விமர்சனங்களால்... இப்படம் 1000 கோடி வசூலை நெருக்கமா என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Sivakarthikeyan in Goat Movie

இது ஒருபுறம் இருக்க... ஏன் தளபதி நடித்து வெளியாகியுள்ள 'கோட்' படத்தில் வெங்கட் பிரபு ஒளித்து வைத்திருக்கும் 5 சீக்ரெட் தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்:

சிவகார்த்திகேயன்:

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில்... முன்னணி இடத்தை பிடித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், தளபதி விஜய் மீது வைத்துள்ள அன்பிற்காகவும், வெங்கட் பிரபு கேட்டுக்கொண்டதால் அவர் மீது வைத்திருக்கும் மரியாதை நிமித்தமாகவும், 'கோட்' படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். ஒரே ஸ்கிரீனில்... இரண்டு ஹீரோவையும் பார்த்து திரையரங்கே அதிர்ந்து வரும் நிலையில் இந்த காட்சியை கண்டிப்பாக ரசிகர்கள் பிக் ஸ்கிரீனில் பார்த்து ரசிக்க வேண்டிய தரமான காட்சி என்று கூறி வருகிறார்கள். 'கோட்' படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் எந்த ஒரு சம்பளமும் பெறவில்லை என்பது கூடுதல் தகவல்.

ப்ரீ புக்கிங்கில் ரெகார்ட் பிரேக் செய்த 'கோட்'! தளபதியின் டாப் 5 முன்பதிவு பட வசூல் விவரம்!

MS Dhoni In GOAT

தோனி:

சிவகார்த்திகேயன் மட்டும் அல்ல, தளபதி படத்தில் தல வரும் காட்சிகளையம் கோர்த்து விட்டு... மரண மாஸ் செய்துள்ளார் வெங்கட் பிரபு. அதாவது CSK கிரிக்கெட் மேட்ச் நடக்கும் ஸ்டேடியத்தில் மேல தளபதியின் ஃபைட் சீன் நடப்பது போலவும்... அந்த நேரத்தில் தல தோனி என்ட்ரி கொடுப்பது போலவும், பழைய காட்சிகளை வெட்டி... ஒட்டி பட்டி டிங்கரிங் பார்த்துள்ளார். இந்த காட்சியை பயன் படுத்துவதற்காக தல தோனியிடமும் ஸ்பெஷல் பர்மிஷனும் வாங்கியுள்ளதாம் படக்குழு.
 

Captain Vijayakanth AI Scene In Goat

விஜயகாந்த்:

விஜய் அறிமுகமான காலத்தில், தளபதிக்கு முகவரியை ஏற்படுத்தி கொடுக்க 'செந்தூர பாண்டி' என்கிற படத்தில் தளபதியுடன் இணைந்து நடித்தவர் விஜயகாந்த். தற்போது சுமார் 30  வருடங்கள் கழித்து விஜயகாந்தின் AI காட்சி  தளபதியின் 'கோட்' படத்தில் இடம்பெற்றுள்ளது. விஜயகாந்த் வரும் இந்த சில நிமிட காட்சியை பார்ப்பதற்கு... கேட்டன் ரசிகர்களும் 'கோட்' படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். மறைந்த கேப்டன் AI மூலம் மறுஜென்மம் எடுத்தால் எப்படி இருக்கும் என்பதை மிஸ் பண்ணாமல் திரையரங்கில் பார்த்து ரசியுங்கள்.

GOAT Review : தளபதி விஜய் சாதித்தாரா? சோதித்தாரா? கோட் படத்தின் விமர்சனம் இதோ
 

GOAT Movie Vijay Car Number Plate

விஜய் கார் நம்பர்:

தளபதி விஜய் நடிப்பை தாண்டி, தமிழக வெற்றிக் கழகம் என்கிற பெயரில் கட்சி ஒன்றை துவங்கி... அதன் தலைவராகவும் மாறியுள்ளார். இவரின் முதல் மாநாடு, விக்ரவாண்டியில் இந்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், 2026-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை 234 தொகுதியிலும் சந்திக்க உள்ளார். எப்படியும் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வர் பதவியில் தளபதியை அமர வைக்க வேண்டும் என்பதில் TVK கட்சியினர் மற்றும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ள நிலையில்... தளபதி தன்னுடைய  CM ஆசையை கார் நம்பர் பிளேட் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அதாவது இப்படத்தில் விஜய் வைத்திருக்கும் காரின் நம்பர் பிளேட்டில் TN 07 CM  2026 என்கிற எழுத்துகள் இடம்பெற்றுள்ளது.

Trisha in GOAT

திரிஷா:

தளபதி விஜய்க்கு ஜோடியாக 'லியோ' படத்தில் நடித்திருந்த த்ரிஷா... 'GOAT' படத்திலும் தளபதியுடன் சேர்ந்து கிக்கான ஆட்டம் போட்டுள்ளார். அதாவது இப்படத்தில் இடம்பெறும் மட்ட பாடலில், கில்லி பட அப்படி போடு பாடலின் ஸ்டெப்பை விஜய்யுடன் சேர்ந்து மீண்டும் போட்டுள்ளார் திரிஷா. கில்லி பட ரெபரென்ஸாக "மருதமலை மாமணியே பாடல் பாடி கொண்டு, விஜய் காதில் பூவோடு, தீபாராதனை காட்டும் காட்சியும் இப்படத்தில் இடம்பெற்றதை" ட்ரைலரிலேயே ரிவீல் செய்திருந்தார் இயக்குனர் வெங்கட் பிரபு என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதிக்கு 200 கோடி சம்பளம்! இயக்குனர் வெங்கட் பிரபு முதல் சினேகா வரை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

click me!