MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தளபதிக்கு 200 கோடி சம்பளம்! இயக்குனர் வெங்கட் பிரபு முதல் சினேகா வரை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தளபதிக்கு 200 கோடி சம்பளம்! இயக்குனர் வெங்கட் பிரபு முதல் சினேகா வரை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள, 'கோட்' திரைப்படம் நடிக்க விஜய் 200 கோடி சம்பளமாக பெற்ற நிலையில், மற்ற நடிகர்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

3 Min read
manimegalai a
Published : Sep 05 2024, 02:03 PM IST| Updated : Sep 05 2024, 02:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
GOAT Movie Release

GOAT Movie Release

தளபதி விஜய்யின் படங்கள் வெளியாகிறது என்றாலே, ரசிகர்களுக்கு அன்றைய தினம் தான்... தீபாவளி, பொங்கல் என அனைத்து விசேஷங்களும். அந்த அளவுக்கு தளபதி விஜய்யின் படங்களை வெறித்தனமாக ஆட்டம் படத்தோடு, வரவேற்பதை வழக்கமாக வைத்துள்ளனர் ரசிகர்கள். ஆனால் இன்றைய தினம் வெளியான 'கோட்' திரைப்படங்கள் வெளியாகும் திரையரங்குகளில் வழக்கத்தை விட, ரசிகர்கள் கொண்டாட்டம் குறைவாகவே இருந்தாலும், கூட்டம் மட்டும் குறையாமல் திரையரங்கை கலைக்கட்ட செய்தது. 
 

211
Goat Fans Celebration

Goat Fans Celebration

ரசிகர்களின் சிறப்பு காட்சிக்கான கொண்டாட்டம் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில், கலைக்கட்டத்தைத்தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, சிறப்பு காட்சிகள் காலை 9 மணிக்கு துவங்குவது தான் என கூறப்படுகிறது. மக்களின் பாதுகாப்பு கருதி தமிழக அரசு இதனை செய்திருந்தாலும், தளபதியின் பல படங்களை காலை 6 மணி மற்றும் 7 மணிக்கு பார்த்து பழகி போன ரசிகர்களுக்கு இது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தளபதி அரசியல் தலைவராகவும் மாறியுள்ளதால்... கொண்டாட்டம் என்கிற பெயரில் பணத்தை வீணடிக்காமல், அந்த பணத்தில் ஏழைகளுக்கு  உணவு, ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி போன்றவற்றை செய்யவேண்டும் என கோரிக்கை விடுப்பதாலும்... ரசிகர்கள் விஜய் பட ரிலீஸின் போது, இதுபோன்ற நற்காரியங்களை செய்ய துவங்கி விட்டனர்.

ப்ரீ புக்கிங்கில் ரெகார்ட் பிரேக் செய்த 'கோட்'! தளபதியின் டாப் 5 முன்பதிவு பட வசூல் விவரம்!

311
The GOAT budget remuneration film Producer Archana Kalpathi revealed

The GOAT budget remuneration film Producer Archana Kalpathi revealed

உலகம் முழுவதும் சுமார் 5000-திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ள 'கோட்' படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால்... 1000 கோடி வசூலை தளபதி எட்டுவாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம், வசூலுக்கு முன்பே விஜய் நடித்ததால் லாபகரமான படமாக அமைத்துள்ளது என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்திருந்தார். 

411
GOAT Movie Vijay Salary

GOAT Movie Vijay Salary

இந்த படத்திற்காக தளபதி விஜய்க்கு சுமார் 200 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்ட நிலையில், இப்படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தளபதிக்கு மட்டும் பாரபச்சம் பார்க்காமல் கோடி கணக்கில் சம்பளத்தை அள்ளி கொடுத்துள்ள அர்ச்சனா கல்பாத்தி, மற்ற நடிகர்களுக்கு கிள்ளி தான் சம்பளத்தை கொடுத்துள்ளார்.

GOAT Review : தளபதி விஜய் சாதித்தாரா? சோதித்தாரா? கோட் படத்தின் விமர்சனம் இதோ

511
Goat Venkat Prabhu Salary

Goat Venkat Prabhu Salary

வெங்கட் பிரபு சம்பளம்:

'கோட்' திரைப்படம் உருவாக காரணமாக இருக்கும் இயக்குனர் வெங்கட் பிரபு தான், விஜய்க்கு அடுத்தபடியாக அதிக பச்சமாக சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி 'கோட்' படத்திற்காக வெங்கட் பிரபு 10 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். கொரோனா சமயத்தில், ரஜினிகாந்த் மற்றும் தனுஷை மனதில் வைத்து கொண்டு, அவர்களுக்காக எழுபட்ட இந்த கதையை எதேர்சையாக தளபதியிடம் கூற, அவருக்கு கதை மிகவும் பிடித்து விட்டதால் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். விஜய் ஓகே சொன்னதால், இப்படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வெற்றிகரமாக ரிலீசும் செய்துள்ளது AGS நிறுவனம்.

611
Prabhu Deva Salary

Prabhu Deva Salary

பிரபு தேவா:

நடிகரும், நடன இயக்குனருமான பிரபு தேவா... 'கோட்' படத்தில் தளபதி விஜய்யின் நண்பராக நடித்துள்ளார். சமீப காலமாக பல படங்களில் படு பிசியாக நடித்து வருவதோடு, நடன இயக்குனராகவும் இருக்கும் இவர், இப்படத்தில் நடிக்க, 2 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பிரபு தேவா ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க 8 முதல் 10 கோடி வரை சம்பளமாக பெற்று வரும் நிலையில், இப்படத்தில் குணச்சித்திர ரோலில் நடித்துள்ளதுள்ளதால் குறைவான சம்பளமே பெற்றுள்ளார்.

சுடிதார் அணிந்து வந்த சொர்கமே.. மஞ்சளில் அசத்தும் நிவேதா தாமஸ் - கூல் கிளிக்க்ஸ்!

711
Actor Prashanth Salary in Goat

Actor Prashanth Salary in Goat

பிரசாந்த்:

90-களில் தளபதி விஜய்யை விட பல லட்சம் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் தான் பிரஷாந்த். இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'அந்தகன்' திரைப்படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்த நிலையில், மீண்டும் ரசிகர்களால் கவனிக்கப்படும் நடிகராக மாறியுள்ளார். தளபதி விஜய்யுடன் இதுவரை இணைந்து நடித்திடாத இவர், விஜய்க்கு நண்பராக... ஒரு மேலதிகாரி போன்ற ரோலில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நடிக்க இவருக்கு 75 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

811
Jayaram Goat Movie Salary

Jayaram Goat Movie Salary

ஜெயராம்:

மூத்த நடிகர் ஜெயராம், 80-பது மற்றும் 90-கால கட்டத்தில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர். இவர் ஒரு மலையாள நடிகர் என்றாலும், தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக தொடர்ந்து குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் துப்பாக்கி படத்திற்கு பின்னர் விஜய்யுடன் நடித்துள்ள இந்த படத்திற்காக, 50 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார்.

என்னது கோட் விஜய்யை போல் நாமும் யங் லுக்கிற்கு மாற முடியுமா! அது எப்படி?

911
Ajmal Salary in Goat Movie

Ajmal Salary in Goat Movie

அஜ்மல் அமீர்:

வில்லன் - ஹீரோ என தமிழ் சினிமாவை கலக்கி வரும் இளம் நாயகனான அஜ்மல்... முதல் முறையாக தளபதி விஜய்யுடன் இணைந்து முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் நடிக்க இவர், சம்பளமாக 50 லட்சம் பெற்றுள்ளார்.
 

1011
Mic Mohan Goat Movie Salary

Mic Mohan Goat Movie Salary

மைக் மோகன்:

ஹாரா திரைப்படத்தின் மூலம் பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்த நடிகர் மோகன், 'கோட்' படத்தில் வில்லனாக நடித்துள்ள நிலையில் இப்படத்திற்காக சுமார் 40 லட்சம் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

1111
Sneha Salary

Sneha Salary

சினேகா:

வசீகரா படத்திற்க்கு பின்னர், பல வருடம் கழித்து தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை சினேகா... 'கோட்' படத்தில் நடிக்க 30 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார். திருமணம் ஆகி இரண்டு குழந்தைக்கு தாயான பின்னர், நடிகை சினேகா சிறிய வேடமாக இருந்தாலும் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளது... இவருக்கு கிடைத்த ஜாக்பார்ட் வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தளபதி விஜய்
சிவகார்த்திகேயன்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved