ரஜினிகாந்துடன் கூலி படத்தில் நடிக்க நாகர்ஜுனா வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

Published : Sep 05, 2024, 10:13 PM ISTUpdated : Sep 05, 2024, 10:17 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும்... நடிகர் நாகர்ஜுனா, இந்த படத்திற்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

PREV
16
ரஜினிகாந்துடன் கூலி படத்தில் நடிக்க நாகர்ஜுனா வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?
Tollywood King Nagarjuna

தெலுங்கு திரையுலகின் கிங் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும், நாகார்ஜுனா, ஒரு வெற்றி படத்தை கொடுக்க பல வருடங்களாக கடுமையாக போராடி வருகிறார். காரணம், இவர் ஹீரோவாக நடித்த படங்கள் அனைத்துமே தெலுங்கில் படு மோசமான தோல்வியை தழுவியது. ஆனால் அடுத்தடுத்து கைநிறைய படங்களை வைத்திருக்கும் நாகார்ஜுனா, பிக்பாஸ் தெலுங்கு சீசன் 8 நிகழ்ச்சியில் பிஸியாகியுள்ளார்.

 

26
Nagarjuna Biggboss season 8

அடுத்த மூன்று மாதங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாகர்ஜுனாவுக்கு சுமார் 100 கோடிக்கு மேல் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நாகர்ஜுனா இந்த படத்தில் நடிக்க வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த நடிகை பிரணீதா! வைரலாகும் புகைப்படம் - குவியும் வாழ்த்து!

36
Nagarjuna in Coolie

இந்த படத்தில் நாகர்ஜுனா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அதே சமயம் இது நெகட்டிவ் ஷேடு கொண்ட ரோலாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே லோகேஷ் கனகராஜ் நாகர்ஜூனாவின் கதாபாத்திரத்தை எப்படி வடிவமைத்திருப்பார் என்கிற ஆர்வம் தமிழ் ரசிகர்களை விட, தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் சற்று கூடுதலாகவே இருப்பதாக தெரிகிறது. தமிழில் சில படங்களில் நாகர்ஜுனா நடித்திருந்தாலும் ரஜினிகாந்துடன் முதல் முறையாக நடிப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 

46
Rajiniakanth And Nagarjuna

நாகார்ஜுனா தொடர்ந்து தோல்வி படங்களில் நடித்து வந்தாலும் கூட, தமிழில் நெகட்டிவ் ஷேடுடன் இந்த படத்தில் நடிப்பதால், சம்பளத்தை எக்க சக்கமாக ஏற்றி கேட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி  நாகர்ஜுனாவிற்கு, 'கூலி' படத்திற்காக ரூ.24 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

'GOAT' படத்தில் வெங்கட் பிரபு ஒளித்து வைத்திருக்கும் 5 சீக்ரெட்ஸ்! இதுக்காவது மிஸ் பண்ணாம பார்க்கணும்!
 

56
Nagarjuna Salary in Coolie movie

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் இந்த படம், பான் இந்தியா படத்தில் இவர்களை தவிர ராணா, உப்பேந்திரா போன்ற பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து விட்ட நிலையில், கூறிய விரைவில் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. 

66
Lokesh kanagaraj Direction

நாகர்ஜுனா தனது படங்களுக்கு ரூ.10 கோடிக்கு குறைவாகவே சம்பளம் வாங்கி வருகிறார். சில படங்களுக்கு ரூ.5-6 கோடி வரை மட்டுமே சம்பளம் வாங்கியுள்ளார். சில வெற்றிப் படங்களுக்குப் பிறகு மட்டுமே, ரூ.7-8 கோடி வரை சம்பளம் வாங்கினார். ஆனால்  'கூலி' படத்திற்காக ரூ.24 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுவது, திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவிலில் பிச்சை எடுத்த நடிகருக்கு ஓடி போய் உதவிய கேப்டன் விஜயகாந்த்! சாந்தி வில்லியம்ஸ் பகிர்ந்த தகவல்!
 

Read more Photos on
click me!

Recommended Stories