இந்த வாரம் திரையரங்கில் வெளியாகி "கோட்" திரைப்படம் தனது ஆதிக்கத்தை செலுத்த உள்ள நிலையில், OTT தளத்திலும் தொடர்ச்சியாக திரைப்படங்கள் வெளியாக உள்ளது. அதன்படி பிரபல நடிகர் நகுல், முனீஸ்கான்த் மற்றும் மூத்த இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்ற "வாஸ்கோடகாமா" என்கின்ற திரைப்படம், நாளை செப்டம்பர் 6ஆம் தேதி ஆஹா மற்றும் அமேசான் பிரைம் ஓடிடி தளங்களில் வெளியாகிறது.