Manjummel Boys : ஓடிடியில் ஒரே நாளில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும் மஞ்சும்மல் பாய்ஸ் & ஹனுமன் - ரிலீஸ் தேதி இதோ

First Published Mar 27, 2024, 7:53 AM IST

திரையரங்கில் வெளியாகி ரூ.200 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்த ஹனுமன் மற்றும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படங்கள் ஒரே நாளில் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது.

manjummel boys, Hanuman

2024-ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு எதிர்பார்த்த அளவு அமையாவிட்டாலும், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களுக்கு ஒரு பொன்னான ஆண்டாகவே அமைந்துள்ளது. இந்த ஆண்டு ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் எதுவும் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை. அதே வேளையில், தெலுங்கு மற்றும் மலையாள மொழியில் ஹிட்டான படங்களுக்கு தமிழ்நாட்டிலும் அமோக வரவேற்பு கிடைத்தது. அப்படி மாஸ் ஹிட் அடித்த படங்கள் தான் மஞ்சும்மல் பாய்ஸ் மற்றும் ஹனுமன்.

HanuMan OTT

இதில் ஹனுமன் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. ரியல் பொங்கல் வின்னர் என்றால் அது ஹனுமன் படம் தான். தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் போன்ற படங்களுக்கு போட்டியாக இப்படம் ரிலீஸ் ஆனாலும், அவற்றையெல்லாம் வசூலில் தூக்கி சாப்பிட்டுவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். பொங்கலுக்கு ரிலீஸான படங்களில் அதிக வசூல் அள்ளியது ஹனுமன் படம் தான். இப்படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.

இதையும் படியுங்கள்... தேவதை வம்சம் நீயோ! நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் பட்டு புடவையில்... பேரழகியாய் ஜொலிக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

hanuman

பேண்டஸி கதையம்சம் கொண்ட இப்படத்தை பிரசாந்த் வர்மா இயக்கி இருந்தார். இப்படத்தில் தேஜா சஜ்ஜா, வரலட்சுமி சரத்குமார், அம்ரிதா ஐயர் என ஏராளமானோர் நடித்திருந்தனர். தியேட்டரில் மாஸ் ஹிட் அடித்த இப்படம் தற்போது ஓடிடிக்கு வந்துள்ளது. வருகிற ஏப்ரல் 5-ந் தேதி ஹனுமன் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு போட்டியாக மற்றுமொரு சென்சேஷனல் ஹிட் படம் ரிலீஸ் ஆகிறது.

Manjummel boys

அது தான் மஞ்சும்மல் பாய்ஸ். மலையாள படமாக இருந்தாலும் இப்படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாடிவிட்டனர். உலகளவில் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய முதல் மலையாள படம் என்கிற சாதனையை மஞ்சும்மல் பாய்ஸ் படைத்துள்ளது. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் மட்டும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ரூ.60 கோடிக்கு மேல் வசூலித்து வரலாறு படைத்துள்ளது.

திரையரங்கில் சக்கைப்போடு போட்ட மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வருகிற ஏப்ரல் 5-ந் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தை சிதம்பரம் இயக்கி இருந்தார். இது கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ஹோலி கொண்டாட்டமாக ஃபேமிலி ஸ்டார் படத்திலிருந்து “மதுரமு கதா” எனும் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியானது !!

click me!