LCU நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்... லோகியின் பர்த்டே பார்ட்டியில் சர்ப்ரைஸ் விசிட் அடித்த மாஸ் ஹீரோ

First Published Mar 14, 2024, 2:49 PM IST

இன்று 38-வது பிறந்தநாளை கொண்டாடும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய எல்சியு நண்பர்களுடன் பிறந்தநாள் பார்ட்டியை கொண்டாடி உள்ளார்.

lokesh kanagaraj Birthday

மாநகரம் படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே தன்னுடைய விறுவிறுப்பான திரைக்கதையால் அசர வைத்த லோகி, அடுத்ததாக கார்த்தியின் கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார். இன்று லோகேஷ் சினிமேட்டிக் யூனிவர்ஸ் உருவாக அடித்தளம் அமைத்ததே கைதி திரைப்படம் தான். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யுடன் கூட்டணி அமைத்து மாஸ்டர் என்கிற மாஸ் ஹிட் படத்தை கொடுத்தார் லோகி.

lokesh kanagaraj Birthday Party

தமிழ் சினிமாவில் ஹாட்சிக் ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக தன்னுடைய குருவான கமல்ஹாசன் உடன் முதன்முறையாக கூட்டணி அமைத்தார். ஒரு ஃபேன் பாய் சம்பவமாக விக்ரம் படத்தை செதுக்கி இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு தரமான ஹிட் படமாக அமைந்ததோடு, கமல்ஹாசனுக்கு சரியான கம்பேக் படமாகவும் விக்ரம் அமைந்தது. இதையடுத்து விஜய்யை வைத்து லியோ என்கிற பிரம்மாண்ட வெற்றிப்படத்தை கொடுத்தார் லோகேஷ் கனகராஜ்.

இதையும் படியுங்கள்... தமிழ்நாட்டில் மஞ்சும்மல் பாய்ஸூக்கு டஃப் கொடுக்க வரும் பிரேமலு... இந்த வார தியேட்டர் & OTT ரிலீஸ் படங்கள் இதோ

Arjun das and Ratna Kumar at lokesh kanagaraj Birthday party

தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்துள்ள அவர் அடுத்ததாக ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள தலைவர் 171 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்துக்களும் குவிகின்றன.

Sivakarthikeyan at lokesh kanagaraj Birthday party

இந்நிலையில், அவரின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த பர்த்டே பார்ட்டியில் எல்சியு என எழுதப்பட்ட கேக்கை வெட்டி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதோடு இதில் அவரது நண்பர்களான அர்ஜுன் தாஸ் மற்றும் ரத்னகுமார் ஆகியோரும் கலந்துகொண்டனர். இதுதவிர இந்த பர்த்டே பார்ட்டியில் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் ஆக வந்து கலந்துகொண்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் செம்ம டிரெண்ட் ஆகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... கல்யாணத்துக்கு நாள் குறிச்சாச்சு... ஒருவழியாக திருமண அறிவிப்பை வெளியிட்ட அமீர் - பாவனி ஜோடி

click me!