தமிழர் பண்பாட்டில் அம்மன் கோவில் திருவிழாக்களில் முளைப்பாரி வழிப்பாடு மற்றும் அது வளர்க்கும் முறை பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
முளைப்பாரி சடங்கு என்பது ஒரு குறிப்பிட்ட மாதத்தில் கிராம தெய்வங்களுக்கு கொடை நிகழ்கிறது. அந்த கொடை நிகழ்ச்சியின் ஒரு அங்கமாகவே முளைப்பாரி சடங்கு இடம் பெறுகிறது. மாரியம்மன், காளியம்மன், பத்ரகாளி அம்மன் போன்ற பெண் தெய்வங்களுக்கு முற்றிலும் பெண்களால் நடத்தப்படும் ஒரு சடங்கு தான் முளைப்பாரி ஆகும்.
அதுவும் குறிப்பாக, தமிழகத்தில் தென்மாவட்டங்களில் தான் இந்த அம்மன் கோயில் திருவிழாக்கள் நடைபெறும். பொதுவாகவே, இந்த அம்மன் கோவில் திருவிழாவானது செவ்வாய்க்கிழமை தான் நடக்கும். ஏனெனில், அம்மன் செவ்வாய் கிழமையில் பிறந்ததாக நம்பப்படுகிறது. சரி வாங்க..இப்போது இந்த கட்டுரையில், முளைப்பாரி சடங்கு எப்படி நிகழும்.. அதன் முறைகள் என்ன என்பதை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
undefined
முளைப்பாரி சடங்கு என்றால் என்ன:
இந்த கொடை நாளில் ஊரின் ஒரு பொதுவான இடத்தில் பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விரதம் இருந்து நன்கு செழிப்புடன் வளர்ந்த முளைப்பாரியை சுற்றி கும்மியடித்து வழிபடுவது வழக்கம். இது முழுக்க முழுக்க பெண்களால் செய்யப்படுவதால் இது ஒருவகை வளமையின் குறியீட்டுச் சடங்காகத் திகழ்கிறது.
இதையும் படிங்க: சித்ரா பௌர்ணமிக்கு மட்டுமே இங்கு செல்ல முடியும்.. கண்ணகி கோயில் வரலாறு தெரியுமா?
உங்களுக்கு தெரியுமா.. விவசாயிகள் தங்களிடம் இருந்த விதைகளின் முளைப்பு திறன்களை சோதிப்பதற்காகவே, இந்த முளைப்பாரி சடங்கு செய்யப்படுவதாக சொல்லுகிறார்கள். அதாவது, வளர்பிறை நாளில் விதையை தூவி, ஒன்பதாம் நாளில் அதை ஊர்வலமாக எடுத்துச் சென்று, பிறகு பத்தாம் நாளில் தண்ணீரில் கரைத்து விடுவார்கள்.
இதையும் படிங்க: என்னது கணவனை இழந்தவர்கள் செங்கோலை வாங்கக்கூடாதா? எந்த ஆகமம் அப்படி சொல்லுது? கடுப்பான நீதிபதி!
முளைப்பாரி வளர்க்கும் முறைகள்:
முளைப்பாரி போட முதலில் அதற்கு தேவையான பயிர் வகைகளை வாங்கி வைத்துவிட்டு, பிறகு ஒரு சில்வர் சட்டியில் அரை அளவு மண் போட்டு அதன் மேல் ஆட்டு சாணம், மாட்டு சாணம் போன்றவற்றை போட்டு பிறகு வாங்கி வைத்த விதைகளையும் அதன் மேல் போட்டு தண்ணீர் விட்டு வளர்ப்பார்கள். அதிக சூரிய ஒளி படாத இடத்தில் அதை வைத்து, காலை மாலை நேரங்களில் தண்ணீர் தெளித்து அதை வளர்ப்பார்கள். முளைப்பாரி போட்ட வீட்டில் இறைச்சி சமைப்பதில்லை அனைவரும் சுத்தமாக இருப்பது வழக்கம். முளைப்பாரி போட்ட எட்டாவது நாளில் தான் அதை பார்க்க வேண்டும். முளைப்பாரி நன்கு வளர்ந்தால், அந்த ஆண்டு முழுவதும் அந்த ஊர் செழிப்புடன் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும், அம்மன் அருள் எப்போதும் அந்த ஊர் மீது இருக்கும் என்பது நம்பிக்கை.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D