உங்கள் வீட்டில் எப்போதும் தெய்வீக சக்தி பரவி இருக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள எளிய பரிகாரத்தை மட்டும் செய்தால் போதும். சரி வாங்க இப்போது இந்த கட்டுரையில், அந்த பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை குறித்து பார்க்கலாம்.
பொதுவாகவே, நம்மை சுற்றி ஏதாவது ஒருவகையில் எதிர்மறை ஆற்றல் இருந்து கொண்டே தான் இருக்கும். சொல்லப்போனால், இது நமக்கே தெரியாமல் நம்முடைய வீட்டிற்குள் பரவி இருக்கும். இப்படி வீட்டில் நெகட்டிவ் எனர்ஜி இருப்பதால், வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள், வீண் செலவு, நிம்மதி இல்லா வாழ்க்கை என போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். எனவே, இவற்றில் இருந்து விடுபட வேண்டுமென்றால், வீட்டில் தெய்வீக சக்தி இருக்க வேண்டும். லட்சுமி கடாட்சம் வீட்டில் நிறைந்திருந்தால், இந்த பிரச்சினைகள் அனைத்தும் ஓடோடி விடும்.
இப்படி உங்கள் வீட்டில் தெய்வீக சக்தி எப்பொழுதும் நிறைந்திருக்க, வீட்டில் எந்த கஷ்டமும் ஏற்படாமல் இருக்க, வீட்டில் அன்பும், மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்திக்க, தினமும் வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்து வழிப்பட்டாலும், ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே இருக்கிறது என்று நினைக்கிறீர்களா..? உங்கள் வீட்டில் எப்போதும் தெய்வீக சக்தி பரவி இருக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள எளிய பரிகாரத்தை மட்டும் செய்தால் போதும். சரி வாங்க இப்போது இந்த கட்டுரையில், அந்த பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை குறித்து பார்க்கலாம்.
இதையும் படிங்க: நீங்கள் கேட்டதை கொடுக்கும் கல் உப்பு பரிகாரம்... 48 நாளுக்குள் நினைத்தது நடக்கும்.. நம்புங்க!
வீட்டில் தெய்வீக சக்தி நிறைந்திருக்க பரிகாரம்:
வீட்டில் ஒரு பாத்திரம் பன்னீர் அல்லது சுத்தமான தண்ணீரும், ஒரு கைபிடி அளவிற்கு மல்லிகைப்பூவையும் எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது மல்லிகைப்பூவை மகாலட்சுமியின் பாதத்தில் போட்டு சமர்பிக்கவும். பிறகு அந்த பூவை நீங்கள், ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் பன்னீர் அல்லது தண்ணீர் இருக்கும் பாத்திரத்தில் போடவும். மேலும் அதில் சிறிதளவு திருநீரை போடுங்கள். அதை போடும் முன் கடவுளை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இப்போது எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அதனுள் உங்கள் கை வைத்து, ஓம் குபேராய நமஹ மகாலட்சுமியே நமஹ, என்ற மந்திரத்தை உங்களால் எத்தனை முறை சொல்ல முடியுமோ அத்தனை முறையும் சொல்லுங்கள்.
இதனை அடுத்து, ஒரு மாவிலை உதவியுடன் இந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளிக்கவும். நீங்கள் மல்லிகைப்பூவையும் சேர்த்து தெளிக்கும் போது அது காலில் மிதி படாதபடி பார்த்து தெளிக்கவும். கடைசியாக பூஜை அறைக்கு சென்று வழிபடுங்கள். இப்படி செய்த சிறிது நேரத்திலேயே உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் வருவதை உங்களால் உணர முடியும்.
இதையும் படிங்க: ஒரு கைப்பிடி அரிசி போதும்..உங்கள் எல்லா பிரச்சனைகளையும் விரட்ட.. உடனே இந்த பரிகாரத்தை செய்யுங்க!
இந்த பரிகாரத்தை எப்போது செய்ய வேண்டும்?
இந்த பரிகாரத்தை நீங்கள் தினமும் செய்தால் கூட நன்மைதான். ஒருவேளை அப்படி முடியாதவர்கள் வாரத்திற்கு ஒரு முறையாவது செய்ய வேண்டும். ராகு காலம், எமகண்டம் தவிர்த்து மற்ற நாளில் செய்யலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D