- Home
- Gallery
- ஒரு கைப்பிடி அரிசி போதும்..உங்கள் எல்லா பிரச்சனைகளையும் விரட்ட.. உடனே இந்த பரிகாரத்தை செய்யுங்க!
ஒரு கைப்பிடி அரிசி போதும்..உங்கள் எல்லா பிரச்சனைகளையும் விரட்ட.. உடனே இந்த பரிகாரத்தை செய்யுங்க!
நம் வாழ்வில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கும் ஜோதிடத்தில் தீர்வு உண்டு. நீங்கள் பொருளாதார பிரச்சனைகளை எதிர்கொண்டால், குடும்பத்தில் பிரச்சனைகள் இருந்தால், அரிசியில் சில எளிய பரிகாரங்களை செய்யுங்கள்.
அரிசி, நம் பாரம்பரியத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அரிசி நமக்கு உணவாக மட்டுமல்ல, நம் வாழ்வில் அமைதியையும், நிம்மதியையும் தருகிறது. வழிபாட்டில் அரிசி பயன்படுத்தப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா..
ஜோதிட சாஸ்திரத்தின்படி, அரிசி நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அரிசி கொண்டு செய்யப்படும்
இந்த எளிய பரிகாரம் உங்கள் வாழ்க்கையில் இருந்து அனைத்து துன்பங்களையும் நீக்கும்.
வேலை கிடைக்க: நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் உங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றாலோ மற்றும் பலமுறை நேர்காணல்களுக்குப் பிறகும் உங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றாலோ அரிசியில் இதற்கு எளிய தீர்வு உள்ளது. காகத்திற்கு தினமும் இனிப்பு சாதம் தவறாமல் கொடுங்கள். இதை செய்வதன் மூலம் உங்கள் முன் பல வேலை வாய்ப்புகள் உருவாகும். இதனால் உங்களுக்கு நல்ல வேலையும் கிடைக்கும்.
ஜாதகத்தில் சந்திரன் வலுவிழந்தால்: ஜாதகத்தில் சந்திரன் வலுவிழந்தால் தினமும் மன உளைச்சல் தான் ஏற்படும். இதன் காரணமாக வேலை, வியாபாரம் பாதிக்கப்படும். எனவே, வெள்ளிக்கிழமையன்று 21 அரிசியில் மஞ்சளைப் போட்டு, அதை ஒரு சிவப்புத் துணியில் கட்டி, லட்சுமி தேவியின் காலடியில் அர்ப்பணித்து, பூஜைக்கு பிறகு உங்கள் பணப்பையில் வைத்துக்கொண்டால், உங்களது நிதி பற்றாக்குறை மற்றும் மன அழுத்தம் குறையும்.
வீட்டில் பணம் தங்க: நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அது வீட்டில் தங்கவில்லை என்றால், ஒரு துண்டு சிவப்பு துணியில் ஏழு அரிசியை போட்டு, அதை உங்கள் பணப்பையில் வையுங்கள். இதனால் உங்கள் வாழ்க்கையில் நிதி நெருக்கடி ஏற்படாது. இது தவிர ஒவ்வொரு வியாழக்கிழமையும் அரிசி மாவு உருண்டைகள் செய்து மீன்களுக்கு கொடுங்கள். இப்படி செய்தால், அதிர்ஷ்டத்தின் கதவு உங்களுக்கு திறக்கும்.
இதையும் படிங்க: பெண்கள் தங்கத்தில் கொலுசு, மெட்டி அணியலாமா.. கூடாதா..? சாஸ்திரங்கள் சொல்வது என்ன..??
பித்ரு தோஷம் நீங்க: உங்கள் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால், அமாவாசை திதியில் அரிசி கஞ்சி செய்து, அதை காக்கைகளுக்கு கொடுக்கவும். இதனால் பித்ரு தோஷத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.
இதையும் படிங்க: தீராத கடன் பிரச்சனையை தீர்க்கும் சக்தி வாய்ந்த கல் உப்பு பரிகாரம்.. நீங்களே செய்யலாம்..
வெற்றி கிடைக்க: ஒவ்வொரு மாதமும் சதுர்தசி திதியில் உங்கள் வீட்டு குலதெய்வத்திற்கு நான்கு அரிசியை சமர்பித்தால், உங்கள் அதிர்ஷ்டம் இரட்டிப்பாகும். மேலும், நீங்கள் செய்யும் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். குறிப்பாக, அனைத்து பணிகளையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D