ECR இல் உள்ள ஸ்ரீ ஸ்ரீ ராதாகிருஷ்ணர் திருக்கோவிலில் இந்த ஆண்டு புஷ்ப அபிஷேக திருவிழா மே 12 ஆம் தேதி அன்று மாலை 6 மணி முதல் நடைபெற உள்ளது.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சென்னை ECR இல் உள்ள ஸ்ரீ ஸ்ரீ ராதாகிருஷ்ணர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் புஷ்ப அபிஷேகம் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு புஷ்ப அபிஷேக திருவிழா மே 12 ஆம் தேதி அன்று மாலை 6 மணி முதல் நடைபெற உள்ளது.
பக்தர்கள் பகவான் கிருஷ்ணரின் மீதான பக்தியையும் அன்பையும் வெளிப்படுத்துவதற்கு இந்த திருவிழா ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது. பக்தர்கள் பல்வேறு வண்ண மலர்களால் பகவான் கிருஷ்ணருக்கு மலர் அபிஷேகம் செய்வார்கள்.
undefined
'ஹரே கிருஷ்ணா' கீர்த்தனத்துடன் நடைபெறும் இந்த புஷ்ப அபிஷேக திருவிழாவானது, காதிற்கும் கண்ணிற்கும் விருந்தளிக்கும் ரம்யமான திருவிழாவாகும். புஷ்பாபிஷேகத்தை தொடர்ந்து கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரசாத மலர்கள் பக்தர்களுக்கு பெருமளவில் விநியோகிக்கப்படும்.
இதையும் படிங்க: ISKCON : கோலாகலமாய் நடந்து முடிந்த இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை!
பக்தர்கள், கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மலர்களை 'ஹரே கிருஷ்ணா' நாமத்தை பாடி மகிழ்ந்த வண்ணம் ஒருவரின் மீது ஒருவர் தூவி மகிழ்வார்கள். அந்த காட்சியைக் காண்பதற்கு பூமழை பொழிவதைப் போன்று இருக்கும். விழா முழுவதும் ஹரே கிருஷ்ண கீர்த்தனம் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு, பக்தர்கள் விருந்தாவனத்தின் பாரம்பரியமிக்க, "பூலோன் வாலி ஹோலி” திருவிழாவை கொண்டாடி மகிழ்வார்கள்.
இதையும் படிங்க: இஸ்கான் இலவச ஆன்லைன் 'கீதா மகாத்ம்யம்' படிப்பு.. எப்போ தெரியுமா..?
நிகழ்ச்சி அட்டவணை:
கீர்த்தன் மேளா - காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை
சொற்பொழிவு - மாலை 6 மணி
ஆரத்தி - மாலை 6.30 மணி
அபிஷேகம் - இரவு 7 மணி
பிரசாதம் - இரவு 7:45 மணி
விழாவின் இறுதியில் அனைவருக்கும் பக்தி மற்றும் ஆன்மீக நிறை வழங்கும் கிருஷ்ண பிரசாத விநியோகம் நடைபெறும். அனைவரும் விழாவில் கலந்து கொண்டு பகவான் கிருஷ்ணரின் அருளை பெற இஸ்கான் சென்னை அன்புடன் உங்களை அழைக்கிறது. https://www.youtube.com/@ISKCON.Chennai இல் ஆன்லைனில் பார்க்கவும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D