Thalapathy 66 movie: தளபதி 66 புது அப்டேட் தந்து அசத்திய படக்குழு! அதிகாரப்பூர்வமாக போஸ்டருடன் வந்த அறிவிப்பு

First Published May 27, 2022, 10:31 AM IST

Thalapathy 66 movie: நடிகர் விஜய்யின் 66ஆவது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Thalapathy Vijay

பீஸ்ட் படத்தையடுத்து வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தளபதி 66. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக தில் ராஜு இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளார். விஜய்க்கு தமன் இசையமைப்பது இதுவே முதன்முறை. அதனால் இப்படத்தின் பாடல்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

vijay66

குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகிவரும் இதில் விஜய்யுடன் இணைந்து சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், சங்கீதா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது. இதன்மூலம் நடிகர் விஜய் டோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். 
 

vijay66

 இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுமுடிந்தது. இதையடுத்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில், விஜய்யுடன் பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஸ்ரீகாந்த் போன்ற நடிகர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக, நடிகர் விஜய் படப்பிடிப்பு முடிந்து திரும்பியபோது சென்னை விமான நிலையத்தில் எடுக்கப்பட்டதாக வீடியோ ஒன்று அண்மையில் வெளியானது.

vijay66

இந்நிலையில், இப்படம் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஐதராபாத்தில் நடந்துவந்த இப்படத்தின் ஒரு கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாம். இது தொடர்பான தகவலை, விஜய் மற்றும் வம்சி இருக்கும் புகைப்படத்துடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

vijay66

இதையடுத்து, இதன் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு வருகிற ஜூன் 2ஆம் தேதி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விஜய்யின் அடுத்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும், இது பற்றிய அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

  மேலும் படிக்க....Vikram Movie Update: விக்ரம் படத்தை வெளியிட தடையா.? இது என்னது புது சிக்கல்...அதிரடி காட்டிய நீதிமன்றம்...

click me!