Lok Shaba Election 2024: தமிழக முதலவர் ஸ்டாலின் முதல்... விஜய பிரபாகரன் வரை! வாக்களித்த அரசியல் பிரபலங்கள்!

First Published Apr 19, 2024, 3:10 PM IST

மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு, தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே அரசியல் பிரபலங்கள் ஆர்வமுடன் வாக்களித்து வரும் நிலையில், இதுவரை வாக்களித்த அரசியல்தலைவர்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
 

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது வாக்கை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியில் செலுத்தினார். இதற்காக தன்னுடைய வீட்டில் இருந்து நடந்தே வாக்குச்சாவடிக்கு மனைவியுடன் வந்த ஸ்டாலின், வரிசையில் காத்திருந்து தனது வாக்கினை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் என்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளேன். எனவே அனைவரும் அவர்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். 
 

முதல்வரின் மகனும்,  அமைச்சரும், தி.மு.க இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியில் அமைத்திருந்த வாக்குச்சாவடி மையத்திற்கு மனைவி கிருத்திகா உதயநிதியுடன் வந்து, நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தார்.

Lok Shaba Election 2024: எளிமையாக வந்த விக்ரம்... தந்தை - தம்பியுடன் வந்து வாக்களித்த நடிகர் சூர்யா! போட்டோஸ்

கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக மீண்டும் களமிறங்கியிருக்கும் விஜய் வசந்த், கன்யாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அரசு பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

மக்களவை தேர்தலில், கோவை மாநிலத்தில் வேட்பாளராக களமிறங்கியுள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, கரூர் மக்களவைத் தொகுதி க.பரமத்தி ஒன்றியம் ஊத்துப்பட்டி வாக்குச்சாவடியில் தனது பெற்றோருடன் வந்து ஓட்டுப்போட்டார்.

Thalapathy Vijay Injured: கோட் ஷூட்டிங்கின்போது விபத்தில் சிக்கிய விஜய்? கையில் காயத்தோடு வந்து வாக்களித்தார்

நடிகரும் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் தலைவருமான கமல், திமுகவுடன் கூட்டணி வைத்த நிலையில், ஒரு சீட்டு கூட கமல்ஹாசனின் கட்சிக்கு ஒதுக்கப்படாததால், இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தார். மேலும் சென்னை தேனாம்பேட்டையில் தனது வாக்கை செலுத்தினார் செலுத்தினார்.

திமுக கட்சியின் MLA-வான தயாநிதி மாறன் தன்னுடைய மகள் மனைவி... ஆகியோருடன் வந்து, மயிலாப்பூரில் இருந்த அரசு பள்ளியில் தன்னுடைய ஓட்டினை பதிவு செய்தார்.

Breaking: தமிழகத்திலேயே முதல் ஆளாக வந்து வாக்களித்தார் நடிகர் அஜித்!
 

எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி... சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் தன்னுடைய குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.
 

TVK கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய், இன்று காலை வாக்களிப்பதற்காக ரஷ்யாவில் இருந்து சென்னை வந்த நிலையில், நீலாங்கரையில் உள்ள பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.

Thalapathy Vijay: 2024 மக்களவை தேர்தலில் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார் தளபதி விஜய்! வீடியோ
 

மறைந்த தேமுதிக தலைவர், கேப்டன் விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக கட்சியின் பொது செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், ஷண்முக பாண்டியன் மற்றும் விஜய பிரபாகரன் ஆகியோர் சாலிகிராமத்தில் அமைந்துள்ள காவேரிப் பள்ளியில் எனது வாக்கை பதிவு செய்தனர்.
 

click me!