வெங்கடேஷ் பட் பற்றி போட்ட ஒற்றை பதிவு! சர்ச்சையில் சிக்கிய குரேஷி 'குக் வித் கோமாளி'யை விட்டு வெளியேறுகிறாரா?

First Published Apr 13, 2024, 8:09 PM IST

குக் வித் கோமாளி சீசன் 5, நிகழ்ச்சி துவங்க உள்ள நிலையில்... வெங்கடேஷ் பட் பற்றி ஒற்றை பதிவை போட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளார் குரேஷி. இதுகுறித்த முழு விவரத்தை இந்த பதிவில் பார்ப்போம்.
 

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில்... 'பிக்பாஸ்' ஷோவுக்கு அடுத்தபடியாக அதிகமான ரசிகர்களால் பார்க்கப்படுவது, 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி தான். 

இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், 5-ஆவது சீசன் விரைவில் துவங்க உள்ளது. மேலும் இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இரண்டு நடுவர்களில் ஒருவரான செஃப் வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி வேறு நிகழ்ச்சிக்கு தாவி விட்டார்.

Goat First single Release: தளபதி விஜய்யின் குரலில் வெளியாகும் 'GOAT' பட முதல் சிங்கிள் பாடல்! வெளியானது டீசர்!

அதே போல் இந்த நிகழ்ச்சியின் இயக்குனர், தாயாரிப்பாளர் ஆகியோரும் விலகி விட்டனர். எனவே புதிய டீமுடன்... புத்தம் புது பொலிவில் நிகழ்ச்சி துவங்க உள்ளது. செஃப் வெங்கடேஷ் பட்டுக்கு பதில் இந்த முறை, நடுவராக இணைந்துள்ளார் மதம்பட்டி ரங்கராஜ். தாமு மற்றும் மதம்பட்டி ரங்கராஜ் பங்கேற்ற டீசர் ஒன்றும் சமீபத்தில் வெளியானது.
 

இந்த முறை ரக்ஷனுடன் சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் கன்டென்ட் குயின் மணிமேகலை, குரேஷி, ராமர், புகழ், தங்கதுரை, உள்ளிட்ட பலர் கோமாளிகளாக வர உள்ளனர்.

ஸ்ரீதேவி முதல்... அமலா பால் வரை! திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான முன்னணி தமிழ் நடிகைகள் இத்தனை பேரா?

இன்னும் ஒரு சில வாரத்தில் நிகழ்ச்சி துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்... புதிய சர்ச்சையால் சிக்கியுள்ளார் குரேஷி. அதாவது செஃப் தாமு ப்ரோமோவில் சிங்கம் சிங்கிளாக தான் வரும் என கூறி இருந்தார். இதற்க்கு ஏற்றாப்போல்... வெங்கடேஷ் பட் போட்ட பதிவு ஒன்றில்.. "சிங்கம் சிங்கிளா தான் வரும்... நீங்களே சொல்லிடீங்க நாங்க ஆரம்பிக்கிறோம் என பதிவிட்டிருந்தார். இதற்க்கு குரேஷி கரெக்ட்டா சொல்லிடீங்க சார்' என கூற இது சர்ச்சையாக பார்க்கப்பட்டு வருகிறது. ரசிகர்களும் நீங்கள் வெங்கடேஷுக்கு சப்போர்ட் செய்வதால், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியை விட்டு விலகி விட்டீர்களா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

click me!