GOAT : தளபதியின் G.O.A.T.. ஏழு ஆண்டு காத்திருப்பு - சாட்டிலைட் உரிமைத்தை பெரும்தொகைக்கு பெற்ற நிறுவனம்!

First Published May 10, 2024, 6:27 PM IST

Thalapathy Vijay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வரும் தளபதி விஜயின் 68வது படமான "The Greatest of All Time" படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகின்றார்.

vijay

இந்த ஆண்டு தொடக்கத்தில் தளபதி விஜய் அவர்களுடைய ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விஷயமும், அதே நேரத்தில் மிகுந்த வருத்தம் அளிக்கும் ஒரு விஷயமும் வெளியானது. அதில் சந்தோஷம் அளிக்கும் விஷயம் தான் தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கின்ற கட்சியின் மூலம் அரசியல் களத்தில் இறங்குகிறார் என்கின்ற செய்தி.

Priyamani : வயசு 40.. ஆனா பார்த்தால் அப்படி தெரியல.. யங் லுக்கில் அசத்தும் ப்ரியாமணி - கூல் போட்டோஸ் இதோ!

TVK

ஆனால் அதே நேரத்தில் அவர் தற்பொழுது நடித்துவரும் தனது 68வது பட பணிகளை முடித்துவிட்டு அடுத்தபடியாக தனது 69வது பட பணிகளை துவங்குவார் என்றும், அதன் பிறகு தனது நடிப்பு பயணத்திற்கு முழுமையாக ஓய்வு கொடுத்து விட்டு, முழு நேர அரசியல் தலைவராக மாறப் போவதாகவும் கூறியது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையும் கொடுத்தது.

GOAT Movie

வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலில், முதல்வர் வேட்பாளராக தனது கட்சியின் சார்பில் தளபதி விஜய் களம் காண இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவருடைய 68வது திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. மூத்த நடிகர்கள் பிரபுதேவா, பிரசாந்த், நடிகைகள் சினேகா, லைலா உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

Mersal

ஏற்கனவே வெளிநாடுகளிலும், உள்ளூரிலும் பல இடங்களில் இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை பிரபல ஜி தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது. சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தளபதி விஜயின் மெர்சல் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை இந்த நிறுவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஜீ தொலைக்காட்சி பெரும் தொகைக்கு GOAT திரைப்படத்தை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Jyothika: 27 வருஷம் பாலிவுட் திரையுலகில் இருந்து.. இந்த ஒரே ஒரு காரணத்திற்காக ஒதுக்கப்பட்டாரா ஜோதிகா?

click me!