பழங்குடியின மக்களுக்காக புது ஆம்புலன்ஸ்... பாரி வள்ளல் போல் வாரி வழங்கிய பாலாவுக்கு குவியும் பாராட்டுக்கள்

First Published Sep 17, 2023, 11:26 AM IST

விஜய் டிவி மூலம் பிரபலமான பாலா, தற்போது ஈரோடு அருகே ஆம்புலன்ஸ் வசதி இன்றி கஷ்டப்பட்ட பழங்குடியினர்களுக்காக புது ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.

KPY Bala

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் பாலா. இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த மூன்று சீசன்களாக கோமாளியாக களமிறங்கி கலக்கி வந்த பாலாவுக்கு தற்போது சினிமாவில் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதுமட்டுமின்றி சினிமா ஆடியோ லாஞ்சுகளை தொகுத்து வழங்கி வருகிறார். இதனால் அண்மையில் நடைபெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4-வது சீசனில் அவர் கலந்துகொள்ளவில்லை. 

vijay tv Bala

சின்னத்திரை மற்றும் சினிமாவில் பிசியாக இருக்கும் பாலா, பல்வேறு சமூக நலப்பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். ஆதரவற்ற குழந்தகளை படிக்க வைப்பது முதல் முதியோர்களுக்கு உதவி செய்வது வரை இவர் செய்யும் பணிகள் ஏராளம். கடந்த சில மாதங்களாக இவர் ஏழைகளின் மருத்துவ வசதிக்காக இலவசமாக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்து வருகிறார். இதுவரை இரண்டு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த பாலா தற்போது மூன்றாவது ஆம்புலன்ஸை வாங்கி கொடுத்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்... ஆண்டவர் கிட்டயே அப்டேட்டா... கமலின் வெறித்தனமான ரசிகன் என்பதை மீண்டும் நிரூபித்த லோகேஷ் கனகராஜ்

KPY Bala new ambulance

தற்போது ஈரோடு அருகே உள்ள சோளகர் என்கிற பழங்குடியினர் வசிக்கும் கிராமத்திற்கு தான் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்திருக்கிறார் பாலா. சரியான சாலை வசதிகள் கூட இல்லாத அந்த கிராமத்தில் அடிக்கடி காட்டு விலங்குகள் தாக்கி பாதிக்கப்படுபவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் அந்த பழங்குடியின மக்கள் கஷ்டப்பட்டு வந்துள்ளனர். இதை அறிந்த பாலா, தன் சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்திருக்கிறார்.

KPY Bala help for farmers

இதுதவிர அந்த பகுதி அருகே உள்ள தாமரைக்கரை என்கிற கிராமத்தில் வசிக்கும் விவசாய குடும்பங்கள் விவசாயம் செய்ய போதுமான உபகரணங்கள் இன்றி தவித்து வருவதை அறிந்த பாலா, ரூ.3 லட்சம் செலவில் அந்த விவசாயிகளுக்கு தேவையான உபகரணங்களை வாங்கி கொடுத்து உதவி இருக்கிறார். சினிமாவில் கோடி கோடியாய் சம்பாதிக்கும் சில நடிகர், நடிகைகளே உதவி செய்ய முன்வராத இந்த காலகட்டத்தில் சின்னத்திரையில் சம்பாதித்து தொடர்ந்து உதவிகளை செய்துவரும் பாலாவுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... குந்தவை திரிஷா முதல் ஏஜெண்ட் டீனா வசந்தி வரை சைமா விருதுகளை வென்றுகுவித்த பிரபலங்கள் - முழு வின்னர் லிஸ்ட் இதோ

click me!