இனிமே தான் ஆட்டமே இருக்கு.. கனமழைக்கான ரெட் அலர்ட் இருக்கு... வெதர்மேன் சொன்ன குட்நியூஸ்..

By Asianet Tamil  |  First Published May 16, 2024, 10:10 AM IST

தமிழ்நாட்டில் வரும் 18ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது


கோடை காலம் தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வந்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. பொதுமக்களுக்கு கோடை வெப்பத்தில் இருந்து சற்று நிம்மதி கிடைத்துள்ளது. நேற்று தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சேலம், திண்டுக்கல், திருச்சி, கரூர், நாகை, மதுரை, தேனி, நாமக்கல் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

இந்த சூழலில் தமிழ்நாட்டில் வரும் 18ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், 18 முதல் 20ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 12 செ.மீ. முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8.30 மணி வரையிலான நிலவரப்படி, அதிகபட்சமாக தஞ்சை அதிராம்பட்டினத்தில் 10 செ.மீ மழைப்பதிவு கனமழைக்கு வாய்ப்புள்ளதால் அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று காலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை கனமழை கொட்டி தீர்த்தது. இதுதொடர்பான வீடியோவை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.

மழை குறித்து பதிவிட்டுள்ள அவர் “ டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. இது இன்னும் முடியவில்லை. வரும் நாட்களில் கனமழை மேலும் பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த வாரத்தில் சில இடங்களுக்கு ரெட் அலர்ட் கூட விடுக்கப்படலாம். சென்னையை பொறுத்தவரை இன்றைய நாள் சிறப்பான நாளாகவே இருக்கும். மழைக்கு வாய்ப்புள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

What a day for Delta belt and Interiors. Much much deserved. Thank you rare UAC in may. This is not over yet. More to come. Even red alert will come in some places in the next one week.

Chennai ku today looks damn good. pic.twitter.com/uPwpKr7beu

— Tamil Nadu Weatherman (@praddy06)

 

இதனிடையே சென்னையில் இன்று குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவும் நிலையில் காலை இரட்டை வானவில் வானில் தென்பட்டது. இதுதொடர்பான போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Double Rainbow seen over Chennai today morning..😍🌈 pic.twitter.com/bLksUbgJ2d

— Chennai Updates (@UpdatesChennai)

 

click me!