Sivakarthikeyan Net Worth: தமிழ் திரையுலகின் பிரின்ஸ்! நடிகர் சிவகார்த்திகேயன் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா

First Published Feb 17, 2024, 2:53 PM IST

சின்னத்திரையில் இருந்து வந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக கலக்கிக்கொண்டிருக்கும், நடிகர் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு குறித்த முழு தகவல்களை பார்க்கலாம்.
 

Sivakarthikeyan

சின்னத்திரையில் இருப்பவர்களால், வெள்ளித்திரையில் சாதிக்க முடியாது என்பது எழுதப்படாத விதியாக இருந்த நிலையில், அதனை மிக குறுகிய வருடத்தில் தகர்த்தெறிந்தவர் சிவகார்த்திகேயன்.
 

Sivakarthikeyan

இன்ஜினியரிங் படித்திருந்தாலும், ஏதேனும் புதிதாக சாதிக்க வேண்டும் என்கிற துடிப்புடன்... விஜய் டிவியில் ஒளிபரப்பாக கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக தன்னுடைய காமெடி பயணத்தை துவங்கினார். காமெடியை தாண்டி, இவருக்கு இருக்கும் திறமைக்கு தொகுப்பாளர் பொறுப்பை கொடுத்து அழகு பார்த்தது விஜய் டிவி.

Nivisha Hospitalized: சன் டிவி சீரியல் ஹீரோயினுக்கு என்ன ஆச்சு? திடீர் என மருத்துவமனையில் அனுமதி!
 

கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் கில்லியாக பயன்படுத்திக்கொண்ட சிவகார்த்திகேயன், ஒரு கட்டத்திற்கு மேல் வெள்ளித்திரையில் பட வாய்ப்புகளை தேட துவங்கினார். பசங்க, வம்சம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பாண்டிராஜ்... 2012-ஆம் ஆண்டு தான் இயக்கிய ஸ்மால் பட்ஜெட் படமான 'மெரினா' படத்தில் சிவகார்த்திகேயனை ஹீரோவாக அறிமுகம் செய்தார்.

இதை தொடர்ந்து அதே ஆண்டு, தனுஷுடன் 3 மற்றும் மனம் கொத்தி பறவை ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் நடித்தார். இந்த படங்கள் அடுத்தடுத்து முதலுக்கு மோசமில்லாம வெற்றிவேறவே... கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன், என இவர் நடித்த படங்கள் அனைத்துமே ஹிட் லிஸ்டில் இணைந்து, சிவகார்த்திகேயனை முன்னணி ஹீரோவாக உயர்த்தியது. 

Siren Day 1 Collection: திரையரங்கில் சத்தமாக ஒலிக்கும் ஜெயம் ரவியின் 'சைரன்'..! முதல் நாளே இத்தனை கோடி வசூலா?

Sivakarthikeyan

தன்னுடைய அசுர வளர்ச்சியை உறுதி செய்த பின்னர், ஆக்‌ஷன் மோடுக்கு மாறிய மாறிய சிவகார்த்திகேயன்  ரெமோ, சீமராஜா, வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல், நம்ப வீட்டு பிள்ளை போன்ற படங்களில் நடித்தார். படத்துக்கு படம் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உயர்ந்தது சில முன்னணி நடிகர்களையே ஜெர்க் ஆகியது. 
 

தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து நிற்கும் கோலிவுட் பிரின்ஸ் சிவகார்த்திகேயன், உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்கிற படத்தில், இதுவரை ஏற்று நடித்திராத ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் தன்னுடைய 23-ஆவது படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில், படப்பிடிப்புகளும் ஆரம்பமாகி உள்ளது.

அனிதா விஜயகுமார் மகளுக்கு நடந்த மெஹந்தி கொண்டாட்டம்..! ஒன்று கூடிய குடும்பத்தினர்... வைரலாகும் போட்டோஸ்!

Sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தன்னுடைய 39-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில்... இவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 13 வருடங்களில், ரூ.35 கோடி முதல், ரூ.40 கோடி வரை சம்பளம் வாங்கும் இவரின் சொத்து மதிப்பு 120 கோடி முதல் 150 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.   

சிவகார்திகேயன் நடிகர் என்பதை தாண்டி எஸ்.கே.புரடக்‌ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அதன்மூலம் கனா, டாக்டர், யாழ் போன்ற தரமான படங்களை தயாரித்து வெற்றிகண்டுள்ளார் சிவா. குறிப்பாக டாக்டர் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. 

சில நிமிடங்கள்... படம் பார்க்கிறேன் என்பதையே மறந்து விட்டேன்! புகழ்ந்து தள்ளிய செல்வராகவன்.. நன்றி கூறிய ஹீரோ!

Actor Sivakarthikeyan

இதை தவிர சிவகார்த்திகேயனிடம் 4 சொகுசு கார்கள் உள்ளன. மேலும் இவருக்கு சொந்தமாக சென்னை மற்றும் திருச்சியில் ஆடம்பர பங்களாவும் உள்ளது. இதோடு தனது பூர்வீக கிராமத்திலும் ஒரு பிரம்மாண்ட வீடு ஒன்றை கடந்த ஆண்டு கிரஹப்பிரவேசமும் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!