ஜப்பான் படம் சரியா போகவில்லை... ரெடியாகும் Sequels - மாஸ் காட்ட காத்திருக்கும் கார்த்தியின் 3 படங்கள்!

First Published Dec 7, 2023, 7:33 AM IST

Karthi Sequel Movies : பிரபல நடிகர் கார்த்தி நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படம் தான் ஜப்பான். வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடிகர் கார்த்தி நடித்திருந்தாலும் கூட, வசூல் ரீதியாக அந்த திரைப்படம் பெரும் வெற்றியைப் பெறவில்லை.

Paruthiveeran

பிரபல இயக்குனர் மணிரத்தினம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து, இயக்குனர் அமீர் அவர்களின் பருத்திவீரன் திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக அறிமுகமானவர் தான் கார்த்தி. தொடக்கம் முதலிலேயே மிக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி வரும் கார்த்தி, தமிழ் திரை உலகில் தனது 20ம் ஆண்டை கடந்து பயணித்து வருகிறார். 

இந்த சூழலில் இறுதியாக வெளியான அவருடைய "ஜப்பான்" திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தரவில்லை. இதனால் கூடுதலாக தனது திரைக்கதையின் மீது கவனம் செலுத்த உள்ள நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியாகவுள்ள மூன்று சீக்குவல் திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

KPY Bala: 200 குடும்பத்திற்கு நிதியுதவி அளித்த விஜய் டிவி குக் வித் கோமாளி பாலா! குவியும் பாராட்டு!

Theeran Adhigaram Ondru

பிரபல இயக்குனர் ஹச். வினோத் இயக்கத்தில் ஜிப்ரானின் இசையில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற திரைப்படம் தான் "தீரன் அதிகாரம் ஒன்று". விரைவில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது என்ற தகவல் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Kaithi movie

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சாம் சி எஸ் இசையில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் தான் கைதி. ஏற்கனவே விக்ரம் திரைப்படத்தில் கைதி படத்தின் சில Reference காட்சிகள் இருந்த பொழுதிலும், கைதி திரைப்படத்திற்கென்று பிரத்தியேகமாக இரண்டாம் பாகம் உருவாக உள்ளது என்கின்ற தகவலை லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்படத்தை முடித்த பிறகு கைதி 2 பட பணிகளில் அவர் இணைவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Sardar Movie

பிரபல இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சர்தார். பாக்ஸ் ஆபிஸில் சுமார் 100 கோடி ரூபாய் வசூல் செய்த இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் உருவாக உள்ளது குறிப்பிடுத்தக்கது.

மிக்ஜாம் புயலால் பொதுமக்கள் மிகவும் பாதிப்பு.. தனது ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்த நடிகர் விஜய்..

click me!