அம்மா மட்டுமல்ல கீர்த்தி சுரேஷ் பாட்டியும் நடிகை தானாம்... தமிழ்ல இத்தனை படங்களில் நடித்துள்ளாரா?

First Published Feb 22, 2024, 12:10 PM IST

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷுக்கு சரோஜா என்கிற பாட்டி உள்ளார். இவரும் தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

Keerthy suresh Grand Mother Saroja

தயாரிப்பாளர் சுரேஷ் மேனன் - நடிகை மேனகா தம்பதியின் மகளான கீர்த்தி சுரேஷ், தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா அளவில் பட்டைய கிளப்பி வருகிறார். இதுவரை தமிழ், தெலுங்கு. மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், தற்போது பேபி ஜான் என்கிற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு சென்றுள்ளார். பாலிவுட்டில் அட்லீ தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

Saroja, Keerthy suresh, Menaka Suresh

பேபி ஜான் படம் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் இந்தியில் நடிக்கும் முதல் படமாகும். இது தமிழில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் படமான தெறியின் இந்தி ரீமேக் ஆகும். கீர்த்தியை போல் அவரது தாயார் மேனகாவும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அவர் தமிழில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இதுதவிர கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் மேனன் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள்... லிப் லாக்கா? வாய்ப்பில்ல ராஜா.. பிரபல நடிகருடன் நடிக்க "நோ" சொன்ன கீர்த்தி சுரேஷ் - அவரே கொடுத்த விளக்கம்!

kadaikutty singam saroja

இப்படி கீர்த்தி சுரேஷின் பெற்றோரும் சினிமாவில் இருக்கிறார்கள் என்பது பலரும் அறிந்த ஒன்று தான். ஆனால் கீர்த்தியின் பேமிலியில் இருந்து மற்றொரு நபரும் தமிழ் திரையுலகில் சைலண்டாக கலக்கிக் கொண்டிருக்கிறார். அவர் வேறுயாருமில்லை, கீர்த்தியின் பாட்டி சரோஜா தான். அவர் தமிழில் சிவகார்த்திகேயனின் ரெமோ, கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்திருந்தார் சரோஜா. பாண்டிராஜ் இயக்கிய இப்படத்தில் நடிகர் கார்த்தியின் பாட்டியாக நடித்திருந்தார் சரோஜா.

Dha Dha 87 saroja

இதுதவிர விஜய் ஸ்ரீ இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு திரைக்கு வந்த தா தா 87 திரைப்படத்தில் ஹீரோயினே சரோஜா தான். அப்படத்தின் நாயகன் சாருஹாசனுக்கு மனைவியாக நடித்திருந்தார் சரோஜா. இப்படி தன் மகள் மற்றும் பேத்தியை போல் கீர்த்தியின் பாட்டி சரோஜாவும் சினிமாவில் சைலண்டாக கலக்கிக் கொண்டிருக்கும் தகவல் இணையவாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இதையும் படியுங்கள்... மகனை கதாநாயகனாக்கும் இயக்குனர் முத்தையா! ஆரவாரத்தோடு பூஜை போட்டு துவங்கியது படப்பிடிப்பு!

click me!