விசாரணையின் போது திடீரென பிளேடை விழுங்கிய பிரபல ரவுடி!அலறி அடித்து மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடிய போலீசார்

By Ajmal Khan  |  First Published May 12, 2024, 2:29 PM IST

அடிதடி வழக்கில் சிறைக்கு அனுப்ப சரித்திர பதிவேடு குற்றவாளியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்த போது, திடீரென மறைத்து வைத்திருந்த பிளேடை குற்றவாளி விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


அடிதடி வழக்கில் ரவுடிகள் கைது

சென்னை வில்லிவாக்கம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கவேல்.  நரேஷ் என்கின்ற விக்னேஷ் மற்றும் சந்தோஷ் ஆகிய மூன்று பேரும் மூன்று பேரும் வில்லிவாக்கம் பகுதி அருகில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான மயானம் அருகே மது போதையில் தகாத வார்த்தைகள் பேசிக்கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருந்துள்ளனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரோந்து போலீசார் குடிபோதையில் ரகலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த  மூன்று பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர் 

Tap to resize

Latest Videos

பிளேடை விழுங்கிய ரவுடி

இந்த விசாரணையின் போது விக்னேஷ் என்கின்ற நரேஷ் மீது சென்னை வில்லிவாக்கம், புளியந்தோப்பு, கொரட்டூர், அம்பத்தூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது மேலும் இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து அடிதடியில் ஈடுபட்டதால் இவர்கள் மீது அடிதடி வழக்கு பதிவு செய்து இவர்களை சிறைக்கு அனுப்பும் பணியினை வில்லிவாக்கம் காவல் துறையினர் மேற்கொண்டு வந்தனர். அப்போது, சரித்திர பதிவேடு குற்றவாளியான விக்னேஷ் என்கின்ற நரேஷ் திடீரென தனது சட்டை பையில் மறைத்து வைத்திருந்த சிறியதாக பிளேட்டினை வாயில் போட்டு விழுங்கியுள்ளார்,

மருத்துவமனையில் ரவுடிக்கு சிகிச்சை

இதனையடுத்து தொண்டை விக்கியபடி தண்ணீர் கேட்டதால் காவல்துறையினர் விக்னேஷ்க்கு குடிக்க தண்ணீர் கொடுத்துவிட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனை தொடர்ந்து அங்கு அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக அவன் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு ததீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

கூகுள் மேப்பை நம்பி முட்டு சந்தில் சம்பவம் செய்த பெண்.. வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய கொடூரம்

click me!