புடிச்சாலும் புளியம் கொம்புதான்! தன்னை விட வசதியான பெண்ணை திருமணம் செய்து கொண்ட 7 தமிழ் நடிகர்கள்!

First Published Apr 12, 2024, 8:40 PM IST

தன்னைவிட வசதி படைத்த பெண்களை திருமணம் செய்து கொண்ட, 7 முன்னணி தமிழ் நடிகர்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
 

திரை பிரபலங்கள் சிலர் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், ஒரு சிலர் தங்களுடைய பெற்றோர் பார்த்து முடிவு செய்யும் பெண்களையே திருமணம் செய்து கொள்கின்றனர்.அதிலும் குறிப்பாக சில நடிகர்கள் பொருளாதார ரீதியில் உயர்ந்த இடத்தில் உள்ள பெண்களை திருமணம் செய்து கொள்ள ஆவர்வம் காட்டுகின்றனர். அப்படி கோடீஸ்வர விட்டு பெண்களை திருமணம் செய்து கொண்ட, சில நடிகர்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
 

விக்ரம் பிரபு:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருக்கும் விக்ரம் பிரபு, தன்னுடைய பெற்றோர் பார்த்து முடிவு செய்த பெண்ணான லட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரபுவின் நெருங்கிய நண்பரின் மகள் தான் லட்சுமி. சிவாஜிகணேசனின் வாரிசுகளுக்கு சொத்து... பத்தில் குறைவில்லை என்பது நாம் அறிந்தது தான். அதே போல் விக்ரம் பிரபுவின் மாமனாரும் மிகவும் வசதி படைத்தவர்.  சேலத்தில் மிகப்பெரிய தொழிலதிபராக உள்ள இவருக்கு, சொந்தமாக கல்லூரி, மற்றும் பல நிறுவனங்கள் உள்ளது.

Gossip: 68 வயது தயாரிப்பாளரை பணத்துக்காக வளைத்து போட்ட.. 25 வயது இளம் நாயகி! கோலிவுட் ஹாட் டாப்பிக் இதாங்க!

தனுஷ்:

தமிழ் சினிமாவில் மிகவும் போராடி முன்னணி இடத்திற்கு வந்தவர் தனுஷ். இவருடைய தந்தை கஸ்தூரி ராஜாவும் ஒரு உதவி இயக்குனராக இருந்து, பின்னர் இயக்குனர், தயாரிப்பாளர், என உயர்ந்தார். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா காதலித்து வருவதாக வெளியான தகவலை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் தனுஷ் பெற்றோரிடம் பேசி, முன் நின்று இவர்களின் திருமணத்தை நடத்தி வைத்தார். தனுஷ் ஆரம்பத்தில் ரஜினியை விட மிகவும் குறைவான வசதியே கொண்டவர் என்றாலும் தற்போது அவரை விட பல கோடி அதிகம் செலவு செய்து தன்னுடைய பெற்றோருக்கு வீடு கட்டிகொடுத்துள்ளார் . பல வருடம் ஒன்றாக வாழ்ந்த தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடி தற்போது விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

Actor Arun Vijay

அருண் விஜய்

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரியின் மகனான அருண் விஜய், ஆர்த்தி மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது பெற்றோர் பார்த்து முடித்து வைத்த திருமணம் ஆகும். தொழிலதிபரும் தயாரிப்பாளருமான அருண் விஜயின் மாமனார், தன்னுடைய மருமகனுக்கு திரையுலகில் நிலையான இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக.. மாஞ்சா வேலு, மலை மலை, போன்ற படங்களை தயாரித்துள்ளார். ஆரம்பத்தில் இவரால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை என்றாலும், தற்போது டாப் நடிகர்களில் ஒருவராக உள்ளார்.

Rj Bravo: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை விஷயம் இருக்கா? இதுவரை யாரும் சொல்லாத ரகசியங்களை உடைத்த ஆர்.ஜே.பிராவோ!
 

vijay, sangeetha

தளபதி விஜய்:

தமிழ் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கும், தளபதி விஜய் லண்டனைச் சேர்ந்த சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சங்கீதாவின் தந்தை சொர்ணலிங்கம் மிகப்பெரிய தொழிலதிபர் ஆவார். இருக்கு இவருக்கு இலங்கை மற்றும் லண்டனில் கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளது. விஜயை விட பல மடங்கு இவர் வசதி படைத்தவர் என கூறப்படுகிறது.
 

ஜெயம் ரவி:

நடிகர் ஜெயம் ரவி பேஷன் டிசைனிங் துறையைச் சேர்ந்த, ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆர்த்தியின் தந்தை தேன் ஆண்டாள் நிறுவனத்தின் மேலாளராக உள்ளார். அதை போல் ஆர்த்தியின் தாயார் சுஜாதா பல்வேறு சின்னத்திரை சீரியல்களை தயாரித்து வருகிறார். சமீப காலமாக பட தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர்களின் குடும்பம் ஜெயம் ரவி குடும்பத்தை விட பன்மடங்கு வசதி படைத்த குடும்பம்.

22 வருடங்களுக்கு பின் விக்ரம் நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா? ஹிட் கொடுத்த சீயான்!

ஆர்யா:

தமிழ் சினிமாவில் அனைவராலும் மிகவும் ஜாலியான நடிகராக பார்க்கப்படுபவர் ஆர்யா. அதே போல் காதல் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாதவர். இவர் பிரபல நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சாயிஷாவின் குடும்பம் இந்தியாவிலேயே மிக முக்கிய கோடீஸ்வரர்களில் ஒருவராக உள்ளனர். அதேபோல் சாயிஷாவின் அம்மா மற்றும் அப்பா இருவருமே பாலிவுட் திரை உலகில் மிக முக்கிய பிரபலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கார்த்தி:

சிவகுமாரின் இளைய மகனான கார்த்தி, தன்னுடைய பெற்றோர் விருப்பப்படி வீட்டில் பார்த்த ரஞ்சனி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ரஞ்சனி  ஈரோட்டை சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபரின் மகள் ஆவார். சிவகுமார் குடும்பத்தை விட இவருக்கு நிலம் மற்றும் பூர்வீக சொத்துக்கள் ஏராளமாம். 

Romeo Day 1 Box Office: விஜய் ஆண்டனியின் 'ரோமியோ' வசூலில் கெத்து காட்டியதா? முதல் நாள் கலெக்ஷன் நிலவரம்!

click me!