Pathala Pathala song: பத்தல பத்தல பாடலின் முக்கிய வரிகள் நீக்கம்...அரசியலை மறைமுகமான சுட்டிக்காட்டினாரா கமல்?

First Published Jun 4, 2022, 10:46 AM IST

Pathala Pathala song: கமல் நடிப்பில், விக்ரம் படத்தின் 'பத்தல பத்தல' பாடலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், பாடலின் முக்கிய வரிகள் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

vikram

நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு எந்த ஒரு படங்களில் நடிக்காமல் அரசியல், பிக்பாஸ் என பிஸியாகவே இருந்து விட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, இளம் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில், விக்ரம் படத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார் .ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு விமர்சனங்கள் எல்லாம் அமோகமாக வந்துள்ளது. படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

vikram

5 மொழிகளில் பிரமாண்டமாக வெளியான விக்ரம் திரைப்படத்தில், கமலுடன் சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள்  நடித்துள்ளனர். கோலிவுட் திரையுலகமே எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படத்தை, ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகின்றனர்.

vikram

விக்ரம் படம் வெளியாவதற்கு முன்னதாகவே, சமீபத்தில் அனிருத் இசையில், பத்தல பத்தல பாடல் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. 'பத்தல பத்தல' பாடலில், இந்த வயதிலும் அடித்து ஆடுகிறார் கமல். அவரது எனர்ஜி லெவல் குறையவேயில்லை. அவரது குரலிலும் அதே எனர்ஜி இருந்தது பெரும் வரவேற்பை பெற்று தந்தது. 

vikram

இந்த பாடலை கமலே எழுதியும், பாடியும் இருக்கிறார். இந்த பாட்டின் வரிகள் தான்  சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது. ஒருபுறம் பாடலுக்கு அதிக வரவேற்பு இருந்தாலும், மறுபுறமும் பாடல் குறித்து விமர்சனமும் முன் வைக்கப்படுகிறது.

Vikram's film

கஜானாலே காசில்லே.. கல்லாலையும் காசில்லே.. காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே..' என அரசின் நிதிநிலைப்பற்றாக்குறையையும், கொரோனாவையும் மறைமுகமாக குறிப்பிட்டிருப்பதாக செய்திகள் உலா வந்தன. அதுமட்டுமல்லாமல், 'ஒன்றியத்தின் தப்பாலே, ஒன்னியும் இல்ல இப்பாலே, சாவி இப்போ திருடன் கையிலே' என அரசியலை  மறைமுகமாக சுட்டி காட்டியிருந்தார். இதையடுத்து, உள்ளிட்ட படத்தின் முக்கிய வரிகள் தற்போது நீங்கப்பட்டுள்ளது. 


 மேலும் படிக்க ....Vikram Movie: விக்ரம் வெளியான முதல் நாளில்...லோகேஷ் கனகராஜுக்கு காத்திருத்த அதிர்ச்சி...பரபரப்பு புகார்...

click me!