கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவுகள்: தயாரிப்பு நிறுவனம் பகீர் தகவல்!

By Manikanda Prabu  |  First Published Apr 30, 2024, 12:19 PM IST

கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படலாம் என அந்த தடுப்பூசியை தயாரித்த அஸ்ட்ராஜெனெகா இங்கிலாந்து நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது


கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படு உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்தியாவில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டு பெரும்பாலானோருக்கு போடப்பட்டது.

இந்தியாவை பொறுத்தவரை, கோவிஷீல்டு, கோவாக்சின், மாடர்னா, ஸ்புட்னிக் V, ஜான்சன் அண்டு ஜான்சன், ஊசியில்லா தடுப்பூசியான சைகோவ்-டி உள்ளிட்ட பல்வேறு தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ள மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது.

Latest Videos

undefined

இருப்பினும், ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து விநியோகிக்கும் கோவாக்சின், புனே சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளே இந்தியாவில் பெரும்பாலானோருக்கு போடப்பட்டன. இந்த இரண்டு தடுப்பூசிகளும் தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் சேர்க்கப்பட்டு, பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டன. தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கியது.

இதில், கோவாக்சின் தடுப்பூசியை ஐசிஎம்ஆர், தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து தேசிய வைராலஜி நிறுவனம் தயாரித்து வருகிறது. இது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. அதேசமயம், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, COVID-19 தடுப்பூசியான “கோவிஷீல்ட்” (Covishield) மருந்தை,  இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், பன்னாட்டு மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவுடன் (AstraZeneca) இணைந்து தயாரித்தது.

சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளிக்க அவகாசம் கோரிய பாஜக, காங்கிரஸ்!

இந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தம் உறைதல், ரத்தத் திட்டுகள் குறைவு pஓன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம் என அந்த தடுப்பூசியை தயாரித்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இங்கிலாந்து நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பிரிட்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணத்தில் 'COVISHIELD' தடுப்பூசி, மிக அரிதாக TTS என்ற ரத்த உறைதல் பக்க விளைவை ஏற்படுத்தும் என்று AstraZeneca கூறியுள்ளது. இந்த தடுப்பூசியால் உயிரிழப்புகளும் பக்க விளவுகளும் ஏற்படுவதாக சுமார் 51 பேர் பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்த நிலையில், AstraZeneca-வின் இந்த விளக்கத்தால் அவர்களுக்கு இழப்பீடு வழங்கும் சூழல் உருவாகி உள்ளது.

இந்தியாவில் சுமார் 174.94 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படலாம் என அந்த தடுப்பூசியை தயாரித்த அஸ்ட்ராஜெனெகா இங்கிலாந்து நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, கொரோனாவை தடுப்பதற்கு இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், பன்னாட்டு மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனெகாவும் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கின. ஆனால், இதனால் பக்கவிளைவுகள் ஏற்படுவதாக கூறி, இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் மருத்துவ பரிசோதனை உலகம் முழுவதும் நிறுத்தப்பட்டது. இருப்பினும், தடுப்பூசியினால் பாதிப்பு ஏற்படவில்லை. அதற்கும் தடுப்புசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிய வந்ததால் மீண்டும் சோதனைகள் நடத்தப்பட்டு அந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது.

இதனிடையே, ஐரோப்பிய நாடுகளில் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை செலுத்தி கொண்ட சிலருக்கு ரத்த உறைவு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதில் பெண் ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் சில நாடுகளிலும் உயிரிழப்பு புகார்கள் எழுந்தன. இதனால் அந்த தடுப்பூசிக்கு பல்வேறு நாடுகள் தற்காலிகமாக தடை விதித்தன. அதன் பின்னர், தடுப்பு மருந்துக்கும், ரத்த உறைவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதற்கான ஆதாரங்கள் கண்டறியப்படவில்லை என்று அஸ்ட்ராஜெனெகா விளக்கம் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!