ஓட்டு போட்டால் வைர மோதிரம் பரிசு.. மேலும் பல பரிசுகள்.. எங்கு தெரியுமா?

By Ramya s  |  First Published Apr 30, 2024, 11:45 AM IST

போபால் மக்களவை தொகுதியில் வாக்களித்தால் வைர மோதிரம், உள்ளிட்ட பல பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக கடந்த 19-ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட மொத்தம் 102 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. ஏப்ரல் 26-ம் தேதி 2-ம் கட்டமாக கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதி உட்பட மொத்தம் 89 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

இந்த நிலையில் 3-ம் கட்ட வாக்குப்பதிவு மே 7-ம் தேதி நடைபெற உள்ளது. குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 94 மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அன்றைய தினம் மத்திய பிரதேசம் மாநிலம் போபால் மக்களவை தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த சூழலில் தேர்தல் நடைபெறும் நாளில் போபாலில் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் அதிர்ஷ்ட குலுக்கல் போட்டி நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

போபாலில் குறைந்த சதவீத வாக்குகளே பதிவாகி வருவதால் இந்த முறை வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில், குலுக்கல் போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் வெற்றி பெறும் நபர்களுக்கு வைர மோதிரம், பிரிட்ஜ், டிவி உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாவட்ட தேர்தல் அதிகாரி கௌஷ்லேந்திர விக்ரம் சிங் இதுகுறித்து பேசிய போது, “ வாக்குப்பதிவு நாளன்று ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் காலை 10 மணி, மதியம் 3 மணி, மாலை 6 மணி என நாங்கள் 3 குலுக்கல் போட்டி நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இந்த போட்டிகளில் வெற்றி பெறும் நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர் “ போபால் மக்களவை தொகுதியில் மொத்தம் 2097 மக்களவை வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. நாங்கள் மொத்தம் 6000க்கும் அதிகமான பரிசுகளை வழங்க உள்ளோம். ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் வாக்களிக்கும் வரும் வாக்காளர்களுக்கு ஒரு கூப்பம் வழங்கப்படும். அதில் வாக்காளரின் பெயர், மொபை எண் ஆகியவற்றை அவர்கள் எழுத வேண்டும். குலுக்கல் போட்டியில் வெற்றி பெறும் வேட்பாளர்களுக்கு நாங்கள் பரிசுகளை வழங்குவோம். வைர மோதிரங்கள், லேப்டாப், ப்ரிட்ஜ், இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.” என்று தெரிவித்தார்.

click me!