Kamalhaasan : இந்தியன் 2 முதல் தக் லைஃப் வரை... கைவசம் உள்ள 4 படங்களின் அப்டேட்டுகளை லிஸ்ட் போட்டு சொன்ன கமல்

First Published Mar 25, 2024, 8:23 AM IST

இந்தியன் 2, இந்தியன் 3, தக் லைஃப் மற்றும் கல்கி 2829AD ஆகிய நான்கு படங்களின் அப்டேட்டுகளை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டு இருக்கிறார்.

Kamal Haasan

தமிழ் சினிமாவில் செம்ம பிசியான நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் கமல்ஹாசன். அவர் கைவசம் இந்தியன் 2, இந்தியன் 3, தக் லைஃப் மற்றும் கல்கி 2829AD ஆகிய நான்கு படங்கள் உள்ளன. இதில் இந்தியன் 2 மற்றும் 3 ஆகிய படங்களை ஷங்கர் இயக்கி வருகிறார். அதேபோல் தக் லைஃப் திரைப்படத்தை மணிரத்னம் இயக்க, பிரபாஸுடன் நடிக்கும் கல்கி 2829AD என்கிற பிரம்மாண்ட பட்ஜெட் படத்தை நாக் அஸ்வின் இயக்கி வருகிறார்.

Indian 2

இதுதவிர தயாரிப்பாளராகவும் செம்ம பிசியாக உள்ள கமல், தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் சிவகார்த்திகேயனின் அமரன், சிம்பு நடிக்க உள்ள எஸ்.டி.ஆர் 48 போன்ற படங்களை தயாரிக்கிறார். அதேபோல் தன்னுடைய நடிப்பில் உருவாகும் தக் லைஃப் படத்தை மணிரத்னம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் இணைந்து தயாரிக்கிறார். இதுமட்டுமின்றி தன்னுடைய மகள் ஸ்ருதிஹாசனும் லோகேஷ் கனகராஜும் இணைந்து நடித்துள்ள இனிமேல் என்கிற ஆல்பம் பாடலையும் தயாரித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... “அதுக்கே 20-25 நாட்கள் ஆனது..” தமன்னா உடனான தனது காதல் கதை குறித்து மனம் திறந்த விஜய் வர்மா..

Thug Life

இப்படி சினிமாவில் செம்ம பிசியாக இருக்கும் கமல்ஹாசன் தற்போது நாடாளுமன்ற தேர்தல் வருவதால் அரசியல் பணிகளில் இறங்கி இருக்கிறார். அவர் திமுக உடன் கூட்டணி வைத்து வருகிற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்கிறார். இதற்காக பிரச்சாரம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார் கமல்ஹாசன். இந்த நிலையில், தனது கைவசம் உள்ள நான்கு படங்களின் அப்டேட்டுகளையும் வரிசையாக வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Kalki 2829AD

அதன்படி, இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாகவும், தற்போது இந்தியன் 2 படத்திற்கான பின்னணி பணிகள் நடைபெற்று வருவதாகவும் அது முடிந்ததும் இந்தியன் 3 பட பின்னணி பணிகள் தொடங்கப்படும் எனவும் கூறி உள்ளார். மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பில் தேர்தலுக்கு பின்னர் கலந்துகொள்ள உள்ளதாக கூறிய கமல், தான் கல்கி 2829AD படத்தில் வெறும் கெஸ்ட் ரோலில் மட்டும் நடிப்பதாக உறுதிபடுத்தி உள்ளார். 

இதையும் படியுங்கள்... அட்டகாசமான மேஜிக்கல் பயணம்.. மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி - சத்தமே இல்லாமல் வெளியான GENIE First Look!

click me!