ஹைதராபாத் வரலாற்று சாதனை வெற்றி – ஐபிஎல் பிளே ஆஃப் இழந்து முதல் அணியாக வெளியேறிய மும்பை இந்தியன்ஸ்!

First Published May 9, 2024, 12:20 AM IST

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 57ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் ரேஸிலிருந்து வெளியேறியுள்ளது.

Mumbai Indians Eliminated

ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழாவை தோல்வியோடு தொடங்கிய மும்பை இந்தியன்ஸ், அடுத்தடுத்து தோல்வி அடைந்து விமர்சனத்திற்கு உள்ளானது. கடைசியாக ஹாட்ரிக் தோல்விக்கு பிறகு ஒரு வெற்றியை பெற்றது. அதன் பிறகு வெற்றி, தோல்வி, வெற்றி என்று 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி பெற்றது. இதையடுத்து கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றது.

IPL, SRH, Travis Head , Abhishek Sharma

இதுவரையில் மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 12 போட்டிகளில் 4 வெற்றி, 8 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது. ஏற்கனவே பிளே ஆஃப் வாய்ப்பும் கேள்விக்குறியாகியிருந்த நிலையில், இன்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் வெற்றி பெற்றிருந்தால் மும்பை அணிக்கு ஏதேனும் பிளே ஆஃப் சான்ஸ் இருந்திருக்கும்.

Latest Videos


Mumbai Indians Playoffs

ஆனால், இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியானது முதல் அணியாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து ஐபிஎல் 2024 தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. எனினும், எஞ்சிய 2 போட்டிகள் முறையே 11 ஆம் தேதி கொல்கத்தா அணியையும், 17 ஆம் தேதி லக்னோ அணியையும் எதிர்கொள்கிறது.

Sunrisers Hyderabad vs Lucknow Super Giants, 57th Match

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியானது பிளே ஆஃப் வாய்ப்பை பெற்று எலிமினேட்டர் சுற்று போட்டியில் வெற்றி பெற்று 2ஆவது தகுதி சுற்று போட்டிக்கு முன்னேறியது. இதில், குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து பரிதாபமாக வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

Mumbai Indians Eliminated

ஆனால், இந்த முறை ஐபிஎல் 2024 பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேறவில்லை. அதுமட்டுமின்றி 12 போட்டிகளில் 4ல் மட்டுமே வெற்றி பெற்று மோசமான சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக ரோகித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் 5 முறை சாம்பியனாகிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Sunrisers Hyderabad vs Lucknow Super Giants, 57th Match

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 57ஆவது லீக் போட்டி ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய லக்னோ 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது.

Mumbai Indians

பின்னர் எளிய இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் இம்பேக்ட் பிளேயராக அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். ஹெட் 16 பந்துகளில் அரைசதம் அடிக்க, அபிஷேக் சர்மா 18 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

Sunrisers Hyderabad vs Lucknow Super Giants, 57th Match

ஹைதராபாத் ஓவர்களில் 107 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 167 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்திற்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் வெற்றி பெற்றதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக ஐபிஎல் 2024 பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

click me!