இந்தியாவில் சாதிய பாகுபாடு தோன்றியது எப்போது? Pondy Lit Fest 2024ல் மனம் திறந்த அரவிந்தன்!

Sep 20, 2024, 11:36 PM IST

அரவிந்தன் நீலகண்டன் கடந்த 1971ம் ஆண்டு நாகர்கோவிலில் பிறந்தவர். அவரது தந்தைவழி தாத்தா வர்ம கலையில் நன்கு தேர்ச்சி பெற்றவர் ஆவார். நாகர்கோவிலில் உள்ள திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவரது தந்தை தான் என்.எஸ்.பிள்ளை. அவரது தாயாரும் அதே நிறுவனத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவர். அதுமட்டுமல்ல அவரது தாய் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்துடன் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது தாய், தந்தையை போலவே எழுத்து என்பது அரவிந்தன் நீலகண்டனுக்கு உயிர் மூச்சாக சிறுவயது முதலேயே இருந்து வந்தது. அது தான் அவரை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பல்வேறு புத்தகங்களை எழுத உத்வேகம் அளித்தது. தமிழகத்தின் வரலாறு குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ள அவர் தற்பொழுது பாண்டிச்சேரியில் நடந்து வரும் Pondy Lit Fest 2024 விழாவில் பங்கேற்று முக்கியமான தலைப்பில் தனது உரையை ஆற்றியுள்ளார்.