தனது இரண்டு திரைப்பட பணிகளை இயக்குனராக முடித்த தனுஷ், உடனடியாக "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" என்கின்ற திரைப்படத்தை இயக்க தொடங்கினார். முழுக்க முழுக்க இளம் நடிகர்கள் நடிகைகளை வைத்து இந்த திரைப்படத்தை இயக்கி வரும் தனுஷ், அந்த திரைப்படத்திற்கு தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. விரைவில் அந்த திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் இயக்க உள்ள அவரது நான்காவது திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவைப்பை பெற்றது.