தனது கூலி திரைப்பட பணிகளுக்காக வெளியூரில் ஷூட்டிங் பணிகளில் ஈடுபட்டு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள தனது 170வது திரைப்படமான "வேட்டையன்" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக சென்னை வந்தார். நேரு உள் விளையாட்டு அரங்கில் தற்பொழுது இந்த இசை வெளியீட்டு விழா நடந்து வருகிறது. அதற்கு முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்தியாளர்களின் கேள்விக்கு ஒன்றன்பின் ஒன்றாக பதில் அளித்து வந்தார்.
தனது வேட்டையன் திரைப்படம் அருமையாக வந்திருக்கிறது என்றும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தின் படபிடிப்பு பணிகளும் சிறப்பாக நடந்து வருவதாக கூறினார். மேலும் வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் யாரெல்லாம் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்று கேட்டதற்கு, எனக்கு இன்னும் தெரியவில்லை, நான் அங்கு சென்று தான் பார்க்க வேண்டும் என்று கூறினார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வாய்ப்புள்ளதாக பேச்சுகள் அடிபடுகிறது, இதுகுறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்ட வுடனேயே, சட்டென்று கோவப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "என்னிடம் அரசியல் சம்மந்தமான கேள்விகளை கேட்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறேன், தயவு செய்து மீண்டும் இப்படி கேட்காதீர்கள்" என்று கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
"உங்க ஆட்சியில் தான் நடந்திருக்கு பவன்" திருப்பதி லட்டு விவகாரம் - பொங்கியெழும் பிரகாஷ் ராஜ்!