பெங்களூரில் புதிய வீடு வாங்கி... கிரஹப்பிரவேசம் செய்த நடிகை மிருணாளினி ரவி! வைரல் போட்டோஸ்!

First Published | Sep 20, 2024, 6:01 PM IST

புதுச்சேரியை சேர்ந்த, நடிகை மிருணாளினி ரவி, தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கிவிட்டதால் பெங்களூரில் புதிதாக வீடு வாங்கி குடியேறியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 

Mirnalini Ravi

எந்த ஒரு சினிமா பின்புலமும் இன்றி, தங்களின் திறமையை வெளிப்படுத்தி சில பட வாய்ப்பை பெறுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில், டிக்டாக் மூலம் பிரபலமானவர் தான் நடிகை மிருணாளினி ரவி. 

Mirnalini Ravi

புதுவையில் பிறந்து வளர்ந்த இவருக்கு, சிறு வயதில் இருந்தே... திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. எனவே சோசியல் மீடியாவில்... ரீல்ஸ் செய்து வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்த மிருணாளினி ரவி, டிக் டாக் மூலம் ஏராளமான ரசிகர்களால் கவனிக்கப்பட்டார்.

அஜித் நடத்திய விதம்... ரஜினி மற்றும் கமல் தான் என் டார்கெட்! பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் ஓப்பன் டாக்!

Tap to resize

Mirnalini Ravi

பார்ப்பதற்கு சும்மா ஹீரோயின் போல் இருந்ததால், இவருக்கு கோலிவுட் திரையுலகில் இருந்து வாய்ப்பு தேடி வர துவங்கியது. அந்த வகையில், கடந்த 2019-ம் ஆண்டு இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் ஒரு ஏலியனாக நடித்திருந்தார்.

Mirnalini Ravi

இது மிக சிறிய கதாபாத்திரம் என்றாலும், இதையடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த சாம்பியன் என்கிற திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் மிருணாளினி ரவி.

விஜய் பட இயக்குனர் கெஞ்சி கேட்டும்... சூப்பர் ஹிட் படத்தில் ஹீரோயினாக நடிக்க மறுத்த பாடகி சைந்தவி!

Mirnalini Ravi

இதன்பின்னர் மிருணாளினிக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. குறிப்பாக இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக எம்.ஜி.ஆர் மகன் மனோ கார்த்திகேயன் இயக்கிய ஐங்கோ போன்ற படத்தில் நடித்தார்.

Mirnalini Ravi

நடிகர் விஷாலுக்கு ஜோடியாக எனிமி திரைப்படத்தில் இவர் டான்ஸ் ஆடிய மால டம் டம் பாடல் பல திருமண வீடுகளில் ஒலிக்க கூடிய பாடலாக மாறியது. இந்த பாடலில் தன்னுடைய அசத்தலான நடன திறமையை வெளிப்படுத்தி இருந்தார் மிருணாளினி.

பிக்பாஸ் சீசன் 8-ல் மல்லுக்கட்ட போகும் அந்த 15 போட்டியாளர்கள் யார்? லீக்கான லிஸ்ட் இதோ

Mirnalini Ravi

நடிகர் விக்ரம் நடித்த கோப்ரா படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்திருந்த இவர், பின்னர் தெலுங்கிலும் இரண்டு படங்களில் நடித்தார். இவர் நடித்த படங்கள் முதலுக்கு மோசம் இல்லாத வரவேற்பை பெற்றதாக கூறப்படுகிறது.

Mirnalini Ravi

அதே போல் இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ரெமோ. இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆண்களை வெறுக்கும் ஒரு பெண்ணை எப்படி கணவர் காதலிக்க வைக்கிறார் என்கிற வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

கோவில் கட்டி கும்பாபிஷேகமே நடத்திருக்காங்க... அதுவும் இத்தனை தமிழ் நடிகைகளுக்கா!!

Mirnalini Ravi

தமிழை விட தெலுங்கில் அம்மணிக்கு படங்கள் வரிசை கட்ட துவங்கியுள்ளது. மற்ற தென்னிந்திய மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வரும் மிருணாளினி ரவி தற்போது பெங்களூரில் வீடு ஒன்றை வாங்கி, குடியேறியுள்ளார். 

Mirnalini Ravi

மொழி இல்லம் என பெயர் வைத்துள்ள இவருடைய வீட்டின் கிரஹப்பிரவேசம் இன்று நடந்துள்ள நிலையில், இதுகுறித்த புகைப்படங்களை மிருணாளினி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சன் டிவி புது சீரியல்களை அடிச்சு பறக்கவிட்ட சிறகடிக்க ஆசை! இந்த வார டாப் 10 TRP விவரம்!

Latest Videos

click me!