அஜித் நடத்திய விதம்... ரஜினி மற்றும் கமல் தான் என் டார்கெட்! பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் ஓப்பன் டாக்!

First Published | Sep 20, 2024, 4:42 PM IST

பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் அஜித்துடன், விவேகம் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்தும், கமல் - ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசையையும்  வெளிப்படுத்தியுள்ளார்.
 

Vivek Oberoi Debut Movie:

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நடிகர் விவேக் ஓபராய், 2002 ஆம் ஆண்டு இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான இந்தி திரைப்படமான 'கம்பெனி' என்கிற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். அதன்பிறகு, அடுத்தடுத்து ஹிந்தி மொழி படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதன்படி, ரோடு, சத்யா, தும், போன்ற படங்களில் நடித்தார். இவர் நடித்த அடுத்தடுத்த படங்கள் ஹிந்தியில் வெற்றிபெற்ற நிலையில்... முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக மாறினார். 
 

Vivek Oberoi Acting with Ajith

இவர் ஹிந்தியில் மட்டும் இன்றி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தலா ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார். மேலும் தமிழில் தல அஜித், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்த , 'விவேகம்' படத்தில் முரட்டு வில்லனாக நடித்திருந்தார். அதே போல் அஜித்துக்கு இணையான கதாபாத்திரமாக இவரின் ரோல் பார்க்கப்பட்டது. இந்த படம் குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்ட விவேக் ஓப்ராய், அஜித் தன்னை ஒரு இளைய சகோதரர் போல நடத்தியதாகவும், தமிழ் சினிமாவில் பணியாற்றுவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று, ஏனென்றால் இங்கு உள்ளவர்கள் புத்திசாலித்தனமாக செயல்படுகிறார்கள். 'விவேகம்' படத்தில் நடித்தது அருமையான அனுபவமாக இருந்தது. படக்குழுவினர் அனைவரையும் ஒரு குடும்பமாக உணர்ந்தேன். மேலும் அஜித் அண்ணாவுடன் பணிபுரிவது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. என்ன ஒரு ஜென்டில்மேன் அவர்! அவர் என்னிடம் அதிக அன்பை காட்டினார்,  என்னை ஒரு தம்பியைப் போல பார்த்து கொண்டார் என தெரிவித்துள்ளார்.

விஜய் பட இயக்குனர் கெஞ்சி கேட்டும்... சூப்பர் ஹிட் படத்தில் ஹீரோயினாக நடிக்க மறுத்த பாடகி சைந்தவி!
 

Tap to resize

Vivek Oberoi About Kamal and Rajinikanth

இதை தொடர்ந்து பேசிய விவேக் ஓப்ராய், தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்கிற தன்னுடைய விருப்பத்தை பகிர்ந்து கொண்டார். "என் தலைமுறையில் உள்ள ஒவ்வொரு நடிகர்களுக்கும், ரஜினி சார் மற்றும் கமல் சாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற கனவு உள்ளது. அவர்களுடன் நான் இணைந்து படம் நடிக்கும் வரை எனது சினிமா பயணம் நிறைவடையாது என தெரிவித்துள்ளார். 

Vivek Oberoi About Chennai:

சென்னை குறித்து பேசிய விவேக் ஓப்ராய், என் அம்மா இங்கிருந்து தான் வந்தவர். நான் என் பாட்டியைப் பார்க்க பல முறை இங்கு வந்துள்ளேன். இந்த ஊரில் கோடை வெய்யில் நாட்களை அதிகமாகக் கழித்திருக்கிறேன். எங்கள் உறவினர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி, மிருதுவான தோசையைச் சாப்பிட்டுவிட்டு, குன்னூருக்குக் குளிர்ந்த காற்றை ரசித்துக்கொண்டு காரில் சென்றது எனக்கு நினைவிருக்கிறது. எனக்கு இங்கு அழகான நினைவுகள் பல உள்ளன. சுனாமி வந்தபோது கூட, ​​கடலூர், தேவனாம்பட்டினத்தில் ப்ராஜெக்ட் ஹோப் செய்ய முயன்றபோது பலர் எனக்கு ஆதரவளித்தனர். அன்று முதல் இன்றும் பல தன்னார்வலர்களையும், மாணவர்களையும் நான் சந்தித்து வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து முடிவுக்கு வரும் சன் டிவி மற்றும் விஜய் டிவியின் 2 பேவரைட் சீரியல்கள்! ரசிகர்கள் கவலை
 

Latest Videos

click me!