தனது திரை வாழ்க்கையில் அதிக ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அதிரடி படங்களில் நடித்துள்ளார் சிரஞ்சீவி. அவ்வப்போது, ஸ்வயம் க்ருஷி, ஆபத்பந்தவுடு, ருத்ரவீணை போன்ற கலைநயமிக்க படங்களிலும் நடித்துள்ளார். இருப்பினும், சிரஞ்சீவி தனது வாழ்க்கையில் மிகவும் விரும்பி.. தனக்காகவே நடித்த படம் ஒன்று உள்ளது. அந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்திருந்ததாம். அந்த படம் வேறெதுவுமில்லை சைரா நரசிம்ஹா ரெட்டி தான்.