
தமிழ் நாட்டு மக்களுக்கு சினிமா, அரசியல் இரண்டுமே மிகவும் மனதுக்கு நெருக்கமானது. அரசியல்வாதிகளையும், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும் சிலை வைத்து வழிபடுவதை பார்த்திருக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டு ரசிகர்கள் ஒருபடி மேலே போய், சினிமா நடிகைகளுக்கு சிலை வைத்து வழிபட்ட சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அப்படி யார் யாருக்கு கோவில் கட்டி ரசிகர்கள் வழிபட்டிருக்கிறார்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
குஷ்பு
இந்திய சினிமா வரலாற்றில் முதன்முதலில் கோவில் கட்டி கொண்டாடப்பட்ட நடிகை என்றால் அது குஷ்பு தான். இவர் கடந்த 1988-ம் ஆண்டு வெளிவந்த தர்மத்தின் தலைவன் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். குறுகிய காலத்திலேயே புகழ் வெளிச்சம் பெற்ற நடிகை குஷ்புவுக்கு அவரது ரசிகர்கள் திருச்சியில் கோவில் கட்டி இருக்கின்றனர். பின்னர் 2005-ம் ஆண்டு அந்த கோவில் இடிக்கப்பட்டது.
நமீதா
தமிழ் சினிமாவில் கிளாமர் குயினாக வலம் வந்தவர் நமீதா. இவர் விஜய், அஜித், சரத்குமார், விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பேமஸ் ஆனார். இவர் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது கடந்த 2008-ம் ஆண்டு கோவில் கட்டப்பட்டது. திருநெல்வேலியில் நமீதாவுக்கு இந்த கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. குஷ்புவுக்கு அடுத்தபடியாக கோவில் கட்டப்பட்ட நடிகை என்கிற பெருமையை நமீதா பெற்றார்.
ஹன்சிகா
தமிழ் சினிமாவில் குட்டி குஷ்பு என கொண்டாடப்பட்டவர் ஹன்சிகா. குஷ்புவுக்கே கோவில் கட்டிய ரசிகர்கள் குட்டி குஷ்பு ஹன்சிகாவுக்கும் அதேபோன்று ஒரு கோவிலை கட்ட முயன்றனர். இதற்காக மதுரையில் கோவில் கட்ட ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், ஹன்சிகா நோ சொன்னதால் அந்த முடிவை ரசிகர்கள் கைவிட்டனர்.
நயன்தாரா
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் சினிமாவில் கிளாமர் ரோல்கள் மட்டுமின்றி அம்மன் வேடத்திலும் நடித்திருக்கிறார். விரைவில் இவர் நடிப்பில் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. தெய்வீக கலையோடு இருக்கும் நயன்தாராவுக்கும் கோவில் கட்ட ரசிகர்கள் முற்பட்டனர். ஆனால் அதற்கு நயன் மறுத்துவிட்டதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
இதையும் படியுங்கள்... பிக்பாஸ் சீசன் 8-ல் மல்லுக்கட்ட போகும் அந்த 15 போட்டியாளர்கள் யார்? லீக்கான லிஸ்ட் இதோ
நிதி அகர்வால்
இந்த லிஸ்ட்டில் இடம்பெற்ற மற்றொரு நடிகை நிதி அகர்வால். இவர் தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக ஈஸ்வரன், உதயநிதியுடன் கலகத் தலைவன் போன்ற படங்களில் நடித்தார். இவருக்கு கடந்த 2022-ம் ஆண்டு சென்னையில் உள்ள ரசிகர்கள் கோவில் கட்டி கும்பாபிஷேகமே நடத்தினர். நிதி அகர்வாலின் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து ரசிகர்கள் வழிபட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவியது.
சமந்தா
ரசிகர்களால்ல் கோவில் கட்டி கொண்டாடப்பட்ட மற்றொரு நடிகை சமந்தா. இவரது தீவிர ரசிகர்கள் ஆந்திர மாநிலம் பாபட்லாவில் உள்ள ஆலபாடு என்கிற கிராமத்தில் கடந்த ஆண்டு கோவில் கட்டினர். இந்த கோவில் சமந்தாவின் பிறந்தநாளன்று கும்பாபிஷேகம் செய்து திறக்கப்பட்டது. இதற்கு பூஜைகள் செய்து மக்களும், ரசிகர்களும் வழிபட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... வம்பிழுத்த சுசித்ராவை வச்சு செய்த வைரமுத்து - என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு!!